50வது வாரத்தில் கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்

%e0%ae%b5%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%af%8dகல்குடா நேசன் இணையதளம் வாரா வாரம் சர்வதேச மற்றும் தேசியளவில் பல்துறைசார் படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், புகைப்படக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் எனப்பலரைச் சந்தித்து அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து வருகின்றோம்.

பலரது வரவேற்பைப் பெற்று, ஒத்துழைப்புடன் 49 வாரங்களை வெற்றிகரமாகக் கடந்து 50 வது வாரத்தை தொட்டு நிற்கின்றோம். இந்த நேர்காணல் பயணத்தை பல்வேறு சிரமங்கள், தடைகளை எதிர்கொண்டு தங்கு தடையின்றி வாரா வாரம் எமது வாசகரிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஆசிரியை சகோதரி கவிதானி ராஜ்சுகா அவர்களின் அர்ப்பணிப்பும், பூரண பங்களிப்பும் மகத்தானது. என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.

அத்துடன், இந்நேர்காணலை ஆரம்பித்து அதனை நெறிப்படுத்தி கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் எனும் வெற்றிப்பயணத்தை ஆரம்பித்து வைத்த கவிஞர் கவியருவி ஓட்டமாவடி றியாஸ் அவர்கள் நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்.

இந்த எமது வெற்றிப்பயணத்திற்கு ஒத்துழைப்பு, ஆதரவு கொடுத்த பெறுமதிமிக்க வாசக நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, நேர்காணலுக்காக அணுகிய போது, பல்வேறு பணிப்பழுக்களுக்கு மத்தியில் எமது கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களை வழங்கி, உரிய காலப்பகுதிற்குள் நேர்காணலில் கலந்து கொண்டு ஒத்துழைத்த படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், புகைப்படக்கலைஞர்கள், பாடலாசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு, இந்தப்பணியை நூலுருவாக்கம் செய்யும் முயற்சியை முன்னெடுக்கும் அதே நேரத்தில், தொடர்ந்தும் நேர்காணலைத் தொடரவுள்ளோம் என்ற சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதோடு, எமது இத்தொடர் பயணத்தில் தங்களின் பூரண  ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்து நிற்கிறோம்.

அத்துடன், எமது கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் இணைந்து கொள்ள நீங்களும் விரும்பினால் எமது kalkudahnation2013@gmail.com அல்லது எமது நேர்காணல் தொகுப்பாளினி கவிதாயினி ராஜ்சுகாவின் raj.suga89@yahoo.com எனும் மின்னஞ்சலூடாகத் தொடர்பு கொள்ள முடியும்.

கடந்த கால ஒத்துழைப்பு போன்று தொடர்ந்தும் தங்களின் அனைவரின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

நன்றி
எம்.ஐ.லெப்பைத்தம்பி
ஆசிரியர்
கல்குடா நேசன்
%e0%ae%b5%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%af%8d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>