கல்குடா நேசனின் 50வது இலக்கிய நேர்காணலைச் சிறப்பிக்க வருகிறார் கலைஞர் நாச்சியாதீவு பர்வீன்

Spread the love

%e0%ae%b5%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%af%8dகவிதாயினி ராஜ்சுகா

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலில் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது  நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம்.

இதுவரையில் வெற்றிகரமாக 49 நேர்காணல்களினூடாக பல்வேறு  துறைசார்ந்த கலைஞர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களோடு கல்குடா நேசனின் நேர்காணலில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

அதன் தொடரில் எமது இவ்வார 50வது  இலக்கிய நேரகாணலைச் சிறப்பிக்க நட்சத்திரப் படைப்பாளியைச் சந்திக்கும்  வாரம். பல தடைகள், போராட்டங்களைத் தாண்டி, தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடும் அநுராதபுரம்-நாச்சியாதீவைச்சேர்ந்த கவிஞரும் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவருமான பிரபலமான படைப்பாளி திரு.நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் இந்நேர்காணலில் எம்மோடு இணைந்து  கொள்கின்றார்.

இவரது  மனவுணர்வுகள், கருத்துக்கள் எவ்வாறு எம் கேள்விகளுக்கூடாக வெளிப்படுகின்றது என்பதனை வாசிக்க வரும் வெள்ளி வரை காத்திருப்பீர்களா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*