மிகச்சிறப்பாக இடம்பெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வருடாந்த இரத்த தான முகாம்

Spread the love
14877074_1305483212803932_1081877783_nசெய்தி-எச்.எம்.எம்.பர்ஷான்
படங்கள்-எச்.எம்.எம்.இத்ரீஸ்  
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கல்குடா  ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா வருடா வருடம் நடாத்தி வரும் இரத்த தான முகாம் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது .
வருடாந்தம் முஹர்ரம் புத்தாண்டில் நடைபெறும் இம்முகாம் இன்று 29.10.2015ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை மீராவோடை, எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுப் பொறுப்பாளர் டொக்டர் மனோ தலைமையிலான குழுவினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த இரத்த தான முகாமில் ஆண்கள், பெண்களுமாக பலர் கலந்து கொண்டதுடன், கோரளைப்பற்று மேற்கு பிராந்திய சுகாதரப்பணிப்பாளர் டாக்டர் நஜீப் கான் அவர்களும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், இளைஞர்கள் என பல தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது இரத்தங்களை தானமாக வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர். 64d47ed0-e0ef-4022-806d-1ff509370046 82fd63dd-2fb6-4289-8303-793580811f1e 911f0639-f257-4748-b524-fd1ec120a6a4 bccccc36-d058-4d8f-bea1-831d25f5cb12 dsc_6980 dsc_6991 dsc_6995 dsc_6997 dsc_7006 dsc_7010 dsc_7012 dsc_7015 dsc_7017 dsc_7021 dsc_7025 dsc_7026 dsc_7029 dsc_7030 dsc_7031 dsc_7033 dsc_7038 14877717_1305483236137263_2069732863_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*