கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில் இணைகிறார் இளைய கவிஞர் மத்துகம செல்வராஜ்

Spread the love

14725588_1311869822158687_6984317833326177870_nகவிதாயினி ராஜ்சுகா14046072_1232697026795169_8168276869998293375_n

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும் போது, எமது  நோக்கத்தை அடைந்து விட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம்.

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 51வது படைப்பாளியாக இணைகிறார் மத்துகம செல்வராஜ்  அவர்கள்.

“திறமைகளைத் தக்க வைத்துக் கொள்வது என்பது வாசகன் எதை விரும்புகின்றானோ அதை அவனுக்கு கொடுத்தாலே போதும்” என கூறுமிவர், பல இந்திய கவிஞர்களிடம் வாழ்த்துக்களைப்பெற்ற இளைய கவிஞர் செல்வா  அவர்கள். தனது  திறமைகள் மீது தீராத நம்பிக்கை கொண்டுள்ள இவர், தனக்கான ஓரிடத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருக்கும் நல்ல முயற்சியாளன்.

இந்த இளைய கவியை கல்குடா நேசனுக்காக சந்தித்தோம். பல நல்ல விடயங்களோடு  தன் இலக்கிய ஆர்வத்தினையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார். இவரின் முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று எமது இணையத்தில்….

நேர்காணல் கவிதாயினி ராஜ்சுகா14725588_1311869822158687_6984317833326177870_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*