கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் கல்வி, ஜீவனோபாய உதவிகள்

Spread the love

15207963_1333038703381716_895845965_nஎம்.எஸ்.எம்.இப்றாஹீம் ஆசிரியர்

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த சிறுவர்களுக்கான கல்வி, ஜீவனோபாய உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குருணாகல்-பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா நாடளாவிய ரீதியில் தந்தையை இழந்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மற்றும் ஜீவனோபாய நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.

இதன் தொடரில் ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் தந்தையை இழந்த சிறுவர்களுக்கான உவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று 23.11.2016ம் திகதி புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ,எல்.பீர்முகம்மது (காஸிமி) MA, அவர்களும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் அநாதைப்பிரிவுக்கான பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஷெய்னுதீன் எஸ். பரீட் அவர்களும் கலந்து கொண்டு நிதியுதவிகளை வழங்கி வைத்தனர்.15174398_1333038726715047_1722337245_n 15175386_1333038786715041_1621388173_n 15207963_1333038703381716_895845965_n 15211643_1333038686715051_580713853_n 15218449_1333038743381712_1654202466_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*