யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவராக IL.பதுர்தீன் தெரிவு

Spread the love

15435839_1358735447478708_1440021860_n(எச்.எம்.எம். பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மேற்கில் பதினான்கு வருட காலமாக சிறப்பான முறையில் இயங்கி வரும் யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் 2017ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தெரிவும் மிகவும் சிறப்பான முறையில் நேற்று 12.12.2016ம் திகதி நடைபெற்றது.

நிர்வாகத்தெரிவில் மீண்டும் தலைவராக IL.பதுர்தீன் சபையோரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பதுர்தீன் கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கத்தவர்களுக்கு பல்வேறுபட்ட ஆலோசனைகளையும் எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அவரது தனதுரையில்,

இளைஞர்களாகிய நாம் விளையாட்டோடு மட்டும் நம் வாழ்வை வைத்துக் கொள்ளாமல், சமய, சமூகப்பணிகளிகளிலும் மிகக்கவனஞ்செலுத்த வேண்டுமென்றும் தொழுகையினை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

யூத் ஸ்ட்டார் விளையாட்டுக்கழகத்தின் 2017 ம் ஆண்டுக்கான நிர்வாகத்தெரிவு பின்வருமாறு:
தலைவர்-I.L.பதுர்தீன்
உப தலைவர்-H.M.I.பகாஸ்தீன்
செயளாளர்.M.I.M.-சப்ரின்
உப செயளாளர்-S.M.நப்ராஸ்
பொருளாளர்.M.L.M. நஜீம்
கணக்கு பரிசோதகர்-M.C.ரஜப்
நிர்வாக உறுப்பிர்கள்:
H.M.M. பர்ஸான்
M.S.சாஐகான்
M.A.M.பிர்னாஸ்
H.R.M.றிஸ்வி
M.M.நபீர்
M.U.றிபான்
A.A.உமர்ஹஸன்
ஆலோசகர்கள்:
M.S.ஹாருன் மெளளவி
A.L.அலியார் ஹாஜி
M.H.முபாரக் மெளவி
விளையாட்டுக்குழுத்தலைவர்- W.இம்தியாஸ்
பிரதித்தலைவர் A.L.அஸ்வர்
கிரிக்கட் தலைவர்-M.T.பைரூஸ்
உப தலைவர்
A.A.உமர்ஹஸன்.
கால்பந்து.B.நிஜாம்தீன்
வலைப்பந்து M.M. தெளபீக்
கபடி.M.M.றிஸா
எல்லே.M.M.சஜித் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.15435839_1358735447478708_1440021860_n 15451334_1358735640812022_1467335514_n 15451377_1358735497478703_922086905_n 15554900_1358735514145368_1708237510_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*