பாடசாலை மாணவிகள் அரை நிர்வாண ஆடைகளைத்தவிர்த்து, ஒழுக்கம் பேண வேண்டும்-தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ்

%e0%ae%b5%e0%ae%b5%e0%af%8dஅஹ்மத் சப்னி 

சீருடை என்றால் மற்றவர் இரசிப்பதற்காக அணிவதா..? அல்லது ஒழுக்கமானதும் மானத்தைக் காப்பதற்குமாக அணிவதா..? என்பதனை சற்றுச்சிந்திக்க வேண்டும்.

ஆடைகள் எவ்வாறு அணிய வேண்டும்? அதிலும் ஆண்களின் ஆடைகள் எவ்வாறிருக்க வேண்டும்? பெண்களின் ஆடைகள் எவ்வாறிருக்க வேண்டும்? இஸ்லாமியப் போதனைகள் மிகவும் சிறப்பாகப் போதித்திருக்கின்றமை சகல மதத்தினரும் நன்றாகப் புரிந்து கொள்வர்.

அது போன்று, ஒவ்வொரு மதத்திலும் ஆடைகள் மாத்திரமல்லாமல், சகல துறைகளிலும் ஒழுக்கம், சுத்தம், உறவு முறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரும் எடுத்து நடப்பதும், மற்றவர்களுக்கு இயம்புவதும் வேறுபட்டதாக இருக்கிறது. எனவே, குறிப்பாக இன்று உலகில் அதிகமான இடங்களில் அனாச்சாரம் இடம்பெறுகிறது. ஐரோப்பிய கலாசாரம் உண்மையான முறையில் கூறப்போனால், சிலரின் நடவடிக்கை பேச்சு வழக்கில் நாயை விடக்கேவலமான கலாசாரமாக அவர்களின் கலாசாரம் இருக்கிறது. கண்ட, நின்ற, இருக்கும் இடங்களிலெல்லாம் ஐந்தறிவுள்ள மிருகம் நடந்து கொள்வது போன்று அவர்கள் நடந்து கொள்வார்கள். அவர்கள் அணியும் ஆடை பற்றி சொல்லவே தேவையில்லை.

ஆனால், அந்த கலாசாரத்தை ஏனையோரும் பின்பற்றப்போனால், நாட்டில் வீதிகளில் குழந்தைகளையும், பிணங்களையும் கண்டெடுக்க வேண்டிய நிலை உருவாகும். என்பது நிஜமான கருத்து.

எனவே, ஒழுக்கமென்பது பணம் கொடுத்து வாங்கும் ஒன்றல்ல. அதனை நாமே நடைமுறையில் கொண்டு செல்ல வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, இன்று சில பாடசாலைகளில் பெண் மாணவர்களின் ஆடைகள் இவ்வாறு தான் இருக்கிறது.

அவர்களால் நினைத்த மாதரி இருக்கவோ, குந்திக்கொள்ளவோ, ஓடவோ முடியாது. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஆடைகள் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நினைத்தது போல் இருக்கலாம், ஆடலாம், பாடலாம், குந்தலாம். ஏன் நான் இதனை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், பெண்களின் அங்கங்கள் இயல்பில் ஒரு ஆணைத்திசை திருப்ப வைக்கிறது. அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், பார்வை திரும்ப வைத்து, மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கிறது. அதனால், விபரீதங்களையும் சிந்திக்கிறது. இதனை இல்லை என்று மறுப்போர் அவர்களை விட பொய்யர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது.

எனவே, ஒழுக்கமான ஆடைகள் அணிவதால் மாணவிகளுக்கும் பாதுகாப்பு, குறிப்பிட்ட ஆண்களுக்கும் பாதுகாப்பு. உதாரணமாக, இன்று அநாச்சாரத்துக்கு துணையாக இருப்பது மதுக்கடைகள். அடுத்து பெண்களின் ஆடைகள். ஒழுக்கமான ஆடையில் ஒரு பெண் பாதையில் நடந்து சென்றால், அவளுக்கு பாதுகாப்பு பாதையில் நிற்போரும் கொடுக்கின்றனர். ஆனால், ஒழுக்கமற்ற அரை நிர்வாணமாக, பிற ஆண்களைக் கவர வேண்டுமென்ற வக்கிரமான புத்தியுடன் ஆடை அணிந்து வீதியில் செல்வோரை பின் தொடரவும் கடத்திச்செல்லவும், கற்பழிக்கவும் இன்னும் என்னவெல்லாம் நடைபெறுகிறது. ஆகவே, கட்டாயம் மூட வேண்டும். பெண்களின் அங்கங்களை ஆடைகளால் அடுத்து மதுக்கடைகளையும் மூடினால் நாட்டில் அநாசாரத்தைக் குறைக்கலாம்.

ஆகவே, இனியும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள் மாணவிகளிடம் ஹிஜாப் அணிய வேண்டாம். ஜீன்ஸ் அணிய வேண்டாம் என்று அரை நிர்வாணமாகத்தான் வர வேண்டுமென்று கட்டளையிடுவதாக இருப்பார்களேயானால், அவர்களுக்கெதிராக படை திரட்டுவதில் இன்றைய இளைஞர்கள் முன்வருவார்கள் என்பது தான் இந்த கட்டுரையின் சாரம்சமாக இருக்கிறது.

எந்த மதமும் ஆடைகளை இறக்கி, இறுக்கி அரை நிர்வாணமாக அணியச் சொல்லவில்லை. பாடசாலைகளில் ஆடைகள் குறைப்பு விடயத்தில் கட்டளையிடும் இப்படியானவர்களின் கேவலமான வக்கிரப் புத்தி கொண்ட நடவடிக்கை இனவாதம், மதவாதம் தூண்டப்பட்டு பிரச்சனைகளுக்கு வழி வகுத்து நிற்கிறது. அவர்களின் பிள்ளைகள் தான் வீதிகளில் ஒழுக்கமற்ற அரை நிர்வாணக்கோலத்தில் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் அவர்களுக்குள் முதலில் ஒழுக்கத்தை, ஆடை விடயத்தில் இருக்கும் மந்த புத்தியை நிவர்த்தி செய்து, சரியான புத்தியுடன் வீதிக்கு வர வேண்டியது இன்றய கட்டாயத் தேவையாக இருக்கிறது.

அத்துடன், இலங்கை நாடு சகல இன மக்களும் ஒற்றுமையாய், ஒரு மித்து சம பங்காய் வாழும் நாடு. அதனால் ஒவ்வொருவரும் அவரவர் கலாசாரத்தில் பிண்னிப்பிணைந்து நடப்பதற்கு ஒரு காலும் தடை விதிக்க முடியாது. தடை விதிக்கக்கூடாது என்பதனை மீண்டுமொரு முறை சுட்டிக்காட்டுதல் நன்று என நினைக்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*