வாழைச்சேனை அல் அக்ஸாவின் நிருவாகத்தெரிவு

fb_img_1481938901212எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை

கல்குடாப் பிரதேசத்தில் ஆரம்ப கால கட்டத்தில் விளையாட்டின் தேவை உணர்ந்து, 1977ம் ஆண்டு காலப்பகுதியில் எமது பிரதேச முக்கிய இளைஞர்களால் அல்-அக்ஸா விளையாட்டுக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து கிழக்கிலங்கையில் பல்வேறு சாதனைகள் படைத்து அல்-அக்ஸா வி.க அப்போது தொடக்கம் இன்று வரைக்கும் மிளிர்ந்து வருகின்றது.

இவ்விளையாட்டு கழகத்தின் நிருவாகத்தெரிவு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அடுத்த ஆண்டிற்கான புதிய நிருவாகத்தெரிவும் எதிர்வரும் 23.12.2016ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை  4.00 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

அல் அக்ஸா வி.க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*