யார் இந்த பஷர் அல் ஆஸாத்? -சிரியா தொடர்-2

Spread the love

15541137_1278880985488271_7137515802189286094_nயு .எச் . ஹைதர் அலி

1971 ம் ஆண்டு தொடக்கம் ஜுன் 10-2000ஆம் ஆண்டு வரை சிரியாவை ஆட்சி செய்த ஹபீஸ் அஸ்ஸாத் மரணித்ததைத் தொடர்ந்து, அவரது மகன் ஆகிய பஷர் அல் ஆஸாத் போட்டியின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சிரிய மக்களின் மாற்றம் குறித்த கனவு முற்றிலும் பொய்யானது.

தனது தந்தையின் பானியிலேயே கடந்த 16 வருடங்களாக ஆட்சி செய்கிறார் இந்த பஷர். இவரும் அவரது தந்தையைப் போல் இராணுவப் பின்னணி கொண்டவர். பஷர் அல் ஆஸாத் மேற்கத்தேய ஊடகங்கள் கூறுவது போல இவரும் இவரது ஆதரவாளர்களும் ஸியா பிரிவைச் சேர்ந்தவர்களல்ல. அவரிடமிருப்பது ஷியாக் கொள்கையோ சுன்னிக்கொள்கையோ அல்ல. அவரிடம் பதவி மோகமும் இராணுவ கொள்கையுமே.

2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி ஈரானும் சிரியாவும் (Defense Cooperation Pact) எனும் எதிரிகளுக்கெதிரான பாதுகாப்பு உடன்படிக்கைய்யொன்றைச் செய்து கொண்டிருந்தன. இந்த உடன்படிக்கை ஏறத்தாழ நேட்டோ உடன்படிக்கை போன்றது. அதன் பின்னர் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்களை இரு நாடுகளும் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் எதிரி நாடு ஓன்று சிரியாவையோ அல்லது ஈரானையோ தாக்கும் போது, இரு நாடுகளும் ஒன்றுபடுவது என்பதைத்தான் வலியுறுத்துகின்றன.

இது போன்ற ஒப்பந்தங்களை ஈரானும் சிரியாவும் மட்டுல்ல உலகில் மேற்கொண்டிருக்கின்றது. சவுதி அரேபியாவும் அமேரிக்காவும் ஈராக், குவைட் ஆக்கிரமிப்பிற்கு பின் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டிருந்தன. பஹ்ரேன் சவுதி அரேபியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் பலனாகத்தான் பஹ்ரேனில் ஏற்பட்ட மக்கள் ஏழுச்சியைக்கூட சவுதி அரேபிய இரானுவத்தின் உதவியோடு அடக்கியதை நாம் யாவரும் அறிந்தது. பல ஆபிரிக்க நாடுகள் பிரான்ஸுடன் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

அந்த உடன்படுக்கையின் அடிப்படையில் தான் ஈரான் சிரியாவின் இறைமையைப் பாதுகாக்க உதவுகிறதா ? அது மாத்திரமல்ல, ஈரானின் எண்ணெய் வளம் ரஸ்யாவினூடாக ஐரோப்பாவுக்குச் செல்லவிருக்கும் வியாபாரத்தில் சிரியாவின் எண்ணெய் வளத்தையும் சிரியாவின் அரசையும் ஈரான் தன் சார்பாக வைத்திருக்க விரும்புகிறது. அதனால் தான் அண்மையில் ரஷ்ய அதிபர் புட்டின் Syria its My Interest கூறியது.

இன்று உலகில் நடைபெறுவது கொள்கைகளுக்கான யுத்தமோ மதத்துக்கான யுத்தமோ அல்ல. மாறாக, இது சித்தாந்தங்களுக்கான யுத்தமுமல்ல. இன்று உலகில் இடம்பெறுவது முழுக்க முழுக்க பொருளாரத்தை மையமாகக் கொண்ட யுத்தம். வளங்களைச் சூறையாடல். சர்வதேச அரசியலையும் காய் நகர்த்தல்களையும் அறியாத முல்லாக்களும் அரபு மத்ரஸாக்களில் மூடிய திரைகளுக்குள் உலக நடப்புக்களைக்கூட அறியாமல் கல்வி கற்ற ஆசாமிகளால் International Affairs, International Relation, International Politic (சர்வதேச அரசியலை பற்றியும் சர்வதே உறவுகள் பற்றியும்) பேச முற்பட்டதன் விளைவு தான் அப்பாவி மக்கள் மத்தியில் எகிப்திய தொழிலாளர் புரட்சிக்கு இஸ்லாமிய சாயம் பூசி காட்ட முற்பட்டது.

சிரியாவின் புவியியல் அமைவிடத்தையும் சனப்பரம்பல் பற்றிய தெளிவு கூட இல்லாமல், சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தை ஷியா-சுன்னி கொள்கைச்சாயம் பூசியது.

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் இடம்பெறும் முறுகல் ஷியா-சுன்னி முறுகல் மாத்திரமல்ல. இது மத்திய கிழக்கின் பொருளாதார, அரசியல் துரைகளில் யார் வல்லரசாக வருவது? எண்ணெய் வளத்தை வைத்து யார் உலகப்பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவது என்றுள்ள பிரச்சினை.

முழு மத்திய கிழக்கையும் சவுதி அரேபியாவினதும் மத்திய கிழக்கு மன்னர்களின் ஆதரவுடன் விழுங்கி ஏப்பமிட முயற்சித்த அமெரிக்காவுக்கு தடையாக இருந்தது ஈரானும் இரண்டு இராணுவ ஆட்சியாளர்களும். அதில் ஒரு இராணுவ ஆட்சியாளர் சத்தாம் அகற்றப்பட்டு விட்டார். அசாத்தை அகற்றப்படுவதற்கு அமெரிக்காவின் மற்றுமொரு தெரிவு புர்ஹான் காலியோன்.

புர்ஹான் காலியோன் தான் ஆட்சிக்கு வந்தால், ஈரானுக்கு சார்பில்லாத நிலைப்பாட்டில் இருக்கப்போவதாகவும், லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் ஆகியவற்றுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தப்போவதாகவும் wall street ஜெர்னல் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்.

கூட்டமாகவுள்ள ஆடுகளை வேட்டையாட முன்னர் அவற்றைத் தனிமைப்படுத்த ஓநாய் முயலுமாம். ஈரான்-சிரியா விடயத்திலும் இதே கதை தான். ஈரானைத்தாக்க வேண்டுமானால், சிரியாவை ஈரானிடமிருந்து பிரிக்க வேண்டும். மத்திய கிழக்கில் ஈரானைத் தனிமைப்படுத்த வேண்டும்.

பஷர் அல் ஆஸாதை ஆட்சியிலிருந்து நீக்கினால், ஈரானுக்கு நண்பர்கள் என்று சொல்வதற்கு மத்திய கிழக்கில் யாரும் இருக்கமாட்டார்கள். அப்போது, ஈரானைத்தாக்குவது இலகுவானது என்பது தான் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் திட்டம். இதனை அரபு நாடுகளின் உதவியுடன் செய்வது தான் இப்போதுள்ள அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் திட்டம்.

சர்வதேச அரசியல் இராஜதந்திரம் மத்ரஸா சிந்தனைகளை விட வெகு தொலைவிலிருக்கின்றது.

தொடரும் 3

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*