இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் கவலை தருகின்றன-மீராவோடையில் அலி சாஹிர் மௌலானா எம்.பி

Spread the love

15666002_685023691675580_1170247329_n(எச்.எம்.எம்.பர்ஸான்)

இன்று நம் சமூகம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இவ்வாறான விடயம் மிகவும் வேதனையையும் கவலையையும் தருகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மீராவோடையில் நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

எமது நாட்டில் பல அமைப்புக்களும், நிறுவனங்களும் சிறு சிறு பிரச்சினைக்காக ஒற்றுமையை இழந்து பல பிரிவுகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பிரிவுகளின் செயற்பாட்டால் நம் சமூகம் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இந்த விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்தோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நமக்குள் என்ன தான் பிரச்சினைகள் இருந்தாலும், நாம் அதனை சந்திப்புக்களை வைத்து, பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறென்றால் தான் நாம் வெற்றியடைவோம்.

குறிப்பாக, இளைஞர் சமூகம் இந்த விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தி, நம் சமூகத்தின் ஒற்றுமைக்காக சிறந்த முறையில் செயற்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கூறினார்.

இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாகிகள், உறுப்பினர்கள், பள்ளிவயால்களின் இமாம்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 15666002_685023691675580_1170247329_n15666082_685002241677725_817678782_n 15666165_685002311677718_1183071665_n 15666297_685002488344367_1276477601_n 15673152_685002478344368_1006980158_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*