சிரிய யுத்தத்தின் பின்னணியும் மௌனம் காக்கும் அரபுலகும்

Spread the love

%e0%ae%9a%e0%ae%95%e0%af%8dவை.எம்.பைரூஸ்

கடந்த ஜந்து வருடங்களுக்கு சிரியாவில் மிகப்பெரும் உள்நாட்டுப்போர் நடந்தேறிய வண்ணமுள்ளது. இப்போரின் மூல காரணி பசருல் அசாத் என்ற கொடுங்கோல் மன்னனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டாம் நடத்த ஆரம்பித்ததே.

அரபுலக வசந்தம் என்ற பேரில் ஆரம்பித்த இந்த மக்கள் கிளர்ச்சியானது, 2010 இல் ஆரம்பித்த தூனிசியாப்புரட்சி போன்று, பொது மக்களுக்கு சாதகமாக அமைந்து. சிரியா தேசத்திலும்  ஐக்கியம், சுபீட்சம், சமாதானம் என ஒரு நல்லாட்சி ஏற்படுமென எதிர்பார்த்தது. சிரியாவில் முற்று முழுதாக அது தலை கீழாக மாறி, ஜனநாயகப்புரட்சியாக மாறிய இப்புரட்சியானது தற்காலத்தில் கொள்கை ரீதியான அடக்குமுறையாக மாறியுள்ளது.

பஷாரின் 53 வருட குடும்ப ஆட்சியின் கொடுமைகளையும்  ஊழல்களையும்  சகிக்க முடியாத சிரியா மக்களே 2011இல் பஷாரின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கெதிராக கொந்தழிக்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரைக்கும் சுமார் 53 வருடங்கள் சிறுபான்மையான ஷீஆக்கள் பெரும்பான்மை முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகிறார்கள்.

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு  முதல் நடைபெற்றும் வரும்  இந்த உள்நாட்டுப்போரில் பல இலட்சத்திற்கும் அதிகமானோர்   உயிரிழந்துள்ளதுடன், பல இலட்சக்கணக்கானோர் இன்று வரைக்கும் அகதிகளாக நாட்டை விட்டு, அயல் நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்த வண்ணமுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க நான்கு வருடங்களாக சிரியா போராளிகள் வசமிருந்த சிரியாவின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான அலெப்போ நகரம் ஒரு சில மாதங்களாக இராணுவத்தினால் முற்றுகையிடப்பட்டு, கடந்த 13ம் திகதி முதல் அலெப்போ நகரம் மீது அத்துமீறலான வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலை உடன் நிறுத்தி அங்கிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பக்கோரி துருக்கி அரசாங்கம் ரஷ்யவுடன் நடத்திய பேச்சு வார்த்தையினால் ஒரு நாள் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் மீண்டும் 15ம் திகதி முதல் பசாருல் அசாத்தின் இராணுவமும், ஈரானின் இராணுவமும் கைகோர்த்து அலெப்போ மீது தான்தோன்றித்தனமான, மனித நேயமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இத்தாக்குதலைக் கண்டித்து இன, மத, மொழிக்கப்பால் மனித நேயமுள்ள அனைத்துலக  மக்களும் தங்களது எதிர்ப்புக்களை பசருல் அசாத்துக்கெதிராகவும், ரஷ்யா அதிபர் புட்டினுக்கெதிராகவும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளனர். இன்னும் பல அரபுலக நாடுகள் தங்களது  பொருளாதார உதவிகளை சிரியா  மக்களுக்கு அனுப்பிக் கொண்டுள்ளனர்.

இருந்தும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட அரபுலக நாடுகள் சிரியாவின் முஸ்லிம்களை  பசருல் அசாத்தின் கொடுமைகளிலிருந்து எவ்வாறான கையாள்தல்களின் மூலம் கட்டுப்படுத்த முடியுமோ, அதனைச் செய்யாமல் வெறுமனே மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வி எங்களிடத்தில் எழாமலில்லை.

உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரும் சாம்ராஜ்யமான சவூதி அரேபியா போன்ற பொருளாதார, ஆயுத பலமிக்க நாடுகள் உலகின் இராணுவ பலமிக்க நாடுகளில் ஒன்றான துருக்கி போன்ற நாடுகளும் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதென்பது கவலைக்குரிய விடயமாகும்.

எவ்வாறாயினும், பசருல் அசாத்தின் இவ்வடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி மாலிக்கியின் அரசாங்கம், லெபனானிலுள்ள ஷீஆக்களின்  ஹிஸ்புல்லாஹ் என்ற அமைப்பும  தீவிரமாக ஆதரவளித்து வருவதோடு, ரஷ்யாவின் அதிபர் புட்டினும் ஈரானும் அவ்விராணுவத்திற்கு ஆயுத உதவிகளை மென்மேலும் செய்து வருகின்றது.

அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற  மேற்குலக நாடுகளும் சவூதி அரேபியா, கத்தார் போன்ற அரபுலக நாடுகளும் கடந்த காலங்களில் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதாரவளித்து வந்ததுடன், ஆயுத உதவிகளும் செய்துள்ளனர். ஆனால், தற்போதய சூழ்நிலையில் அனைத்துமே மதி மயங்கிய நிலையில் தான் தென்படுகின்றது. எவ்வாறாயினும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இது சாதுவாகவே அமையும்.

இவையனைத்திற்கும் முக்கிய சூத்திரதாரி ஈரான். ஆனால், அது தனது செயற்பாட்டை அநேகமாக மறைமுகமாகவே சிரியா இராணுவத்திற்குச் செய்து வருகின்றது. முஸ்லிம் நாடு என்ற போர்வையில் ஈரானை ஆதரிக்கும் உலக முஸ்லிம்கள் இனியாவது ஈரானின் இரட்டை முகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இனி வருங்காலங்களிலாவது அரபுலக நாடுகள் அமெரிக்காவின் கைபொம்மைகளாக இருப்பதை விட்டு, சிரியா வாழ் முஸ்லிம்களின் உரிமைக்காக தனது இராணுவ பலத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அநேகரின்  எதிர்பார்ப்பாகவுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*