துருக்கி-இஸ்ரேல் உறவின் பின்னணி என்ன?

Spread the love

15673220_587446931463093_1183147955_nவரிப்பத்தான்சேனை ஹபீஸுல் ஹக் பாதிஹி

பொதுவாக ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமென்றால் நிச்சயமாக சர்வதேச உறவுகளைக்கடைப்பிடித்தே தீர வேண்டும். அப்போது தான் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திகள் விஸ்தரிக்கப்படும். அந்நாடு முன்னேற்றமும் காணும்.

எனவே, இஸ்ரேல்-துருக்கி உறவுகளைப் பொறுத்த வரை இரண்டு விதமான உறவுகளை உள்ளடக்கியுள்ளது. ஒன்று காஸாவுக்கு உதவும் நோக்குடன் அமைந்த உறவு. இதுவே மிகவும் பிரதானமான காரணம். இரண்டாவது துருக்கியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கி அமைந்த உறவு.

கடந்த 2010 ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் விதித்திருந்த முற்றுகையைத் தகர்க்கும் நோக்கில், உதவிப்பொருட்களுடன் காஸாவை நோக்கிச்சென்ற துருக்கிய கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பதற்றமடைந்தது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் சுமார் 10 துருக்கிய பலஸ்தீன் சமூக ஆர்வலர்கள்  கொல்லப்பட்டனர். பின்னர், இஸ்ரேலுக்கெதிராக துருக்கி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சட்டமூலம் அமலுக்கு வந்து 25 நாட்களில் இஸ்ரேல் 20 மில்லியன் நஷ்டஈடு வழங்குவதோடு, காஸா மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட காஸா மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான  உடன்பாட்டுக்கு துருக்கி விடுத்த மூன்று நிபந்தனைகளில் ஒன்றின்படி இஸ்ரேல் ஏற்கனவே மேற்படி சம்பவத்திற்கு மன்னிப்கேட்டுக்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், துருக்கியின் மாவி மர்மரா கப்பல் மீதான இஸ்ரேலின் உயிர்ப்பலி கொண்ட தாக்குதலுக்கு அது 20 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

தமது நிபந்தனைகள் ஏற்கப்பட்ட நிலையில், இடம்பெறும் இந்த உடன்படிக்கை துருக்கிக்கு மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகும் என்று துருக்கி அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

என்றாலும், துருக்கியின் மற்றுமொரு நிபந்தனையான காஸா  மீதான முற்றுகையை அகற்ற இஸ்ரேல் இணங்கவில்லை. எனினும், எட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கையின்படி துருக்கிற்கு இஸ்ரேலினால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் ஏனைய இராணுவ உற்பத்தியற்ற உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குடியிருப்புக்கட்டடங்கள், மருத்துவமனை போன்ற உட்கட்டமைப்பு வேலைகளைச் செய்யவும் துருக்கிக்கு அனுமதியளித்தது. அதே போன்று, காஸாவின் குடிநீர் மற்றும் மின்சக்தி விநியோகத்தில் நீடிக்கும் சிக்கலை சரி செய்யவும் இந்த உடன்படிக்கையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரமே துருக்கி கடந்த வருடம் மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொதிகள் அடங்கிய மூன்று கப்பல்களை காஸாவுக்கு அனுப்பி வைத்தது. அதே போல், பலஸ்தீனில் இஸ்ரேலினால் உடைக்கப்பட்ட அனைத்துப் பள்ளிவாசல்களையும் மீண்டும் கட்டித்தருவதாக துருக்கிய பொறியியலாளர் தூதுக்குழு வாக்கு கொடுத்தது. எனவே, துருக்கி மற்றும் இஸ்ரேல் உறவுகளின் மிகவும் பிரதானமான நோக்கம் கஸாவுக்கான பொருளாதார உதவிகளை வழங்கல்.

இந்த உறவைத்தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தான் இஸ்ரேலில் ஹைபா காட்டுத்தீ ஏற்பட்ட போது, துருக்கி உதவுவதற்கு முன்வந்தது. இதை அறியாத சிலர் துருக்கிய ஜனாதிபதி அர்துகான் பாவம் செய்து விட்டார். இஸ்ரேலுக்கு உதவுவதற்கு துருக்கிய தீயணைப்பு விமானங்களை அனுப்பியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பொட்ட எழுத்தில் “அர்துகானின் வண்டவாங்கள் என்று” தாருமாறாக அபத்தமான முறையில் விமர்சனஞ்செய்து வருகின்றார்கள்.

கவலை என்னவென்றால், இது பற்றி அறிவுப் பின்னணியில்லாதவர்கள் கூட மிகவும் அபத்தமான முறையில் சமூக வலைத்தளத்தில்  விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

இன்று எமது முஸ்லிம் நாடுகளான எகிப்து-இஸ்ரேல் உறவுகள், சவூதி-அமெரிக்கா உறவுகள், சிரியா-ஈரான் உறவுகள், துபாய்-அமெரிக்கா உறவுகள் பற்றி பலராலும் பலவிதமாகப் பேசப்பட்ட போது, இவர்கள் பேசவில்லை வாய் மூடி மெளனியாக இருந்து விட்டு, இப்போது துருக்கி-இஸ்ரேல் வழிகெட்ட உறவு என்று அறிக்கை விடுகின்றார்கள்.

எனவே, முஸ்லிம் சமூகம் என்ற வகையில் எழுதப்படும் விமர்சனங்களை தக்லீத் தனமாக நம்பிவிடாமல் இது பற்றி பிரசித்தி பெற்றவர்களிடம் தீர விசாரணை செய்து கொள்வது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*