குவைத்தின் சிறந்த இரண்டாவது ரவல்ஸ் நிறுவனமாக TVS தெரிவு: உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கெளரவிப்பு

Spread the love

15878296_1378785772140342_2129584288_oகுவைத்திலிருந்து றமீனா அன்ஸார்

குவைத், கட்டார், பஹ்ரைன், இந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம்,நேபால் போன்ற நாடுகளில் பல கிளைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கி வரும் TVS ஹைதர் குழுமம், பல்வேறு நாடுகளுக்கான கார்கோ சேவைகளை சிறப்பாக நடாத்தி வருகின்றது.

TVS ஹைதர் குழுமத்தின் ரவல்ஸ் அண்ட் கார்கோ சேவையின் ஏழாவது கிளை கடந்தாண்டு (30.09.2016ம் திகதி வெள்ளிக்கிழம) குவைத் பஹஹீல் கல்ப் மார்ட் எதிரேயுள்ள ஒலிவ் சுப்பர் மார்கட் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளிலும் சிறப்பான சேவையை வழங்கி வரும் TVS ஹைதர் குழுமம் குவைத் நாட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டு வருவதுடன், 2016ம் ஆண்டில் சிறப்பான சேவையை வழங்கியமைக்காக சிறந்த டிராவல்ஸ் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த இடத்தை TVS ஹைதர் குழுமம் பெற்றுக்கொள்ளவும் அதன் வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் என்றும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் அதன் நிறைவேற்றுக்குழுவினர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரையும் கெளரவிக்குமுகமாக அதன் நிறுவுனர் Dr.S.M.ஹைதர் அலி அவர்களால் கடந்த 02.01.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெறுமதியான பரிசுப்பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், TVS ஹைதர் குழும நிறுவுனர் Dr.S.M.ஹைதர் அலி அவர்களும், நிறைவேற்றுக்குழுவினர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.15857512_1378785752140344_96782810_o 15857687_1378785775473675_809731901_o 15857792_1378785798807006_1755866602_o 15878044_1378785795473673_1915000475_o 15878086_1378785802140339_328987875_o 15878296_1378785772140342_2129584288_o 15878340_1378785788807007_1787596004_o 15909212_1378785785473674_1553181908_o 15910325_1378785755473677_1631375466_n

3 Comments

  1. ஆம் இங்கே கூறப்பட்டது போல் குவலயம் போற்றும் குவைத் நாட்டுலே மிகவும் சிறப்பாக இயங்கி வரும் இந்த டிவிஎஸ் டிராவல்ஸ் மற்றும் கார்கோ நிறுவனத்தின் அதிபர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர் அலி அவர்கள் .உழைப்பாள் உயர்ந்த பண்பாளர் வள்ளல் குணம் நிறைந்த நல்ல மனம் கொண்டவர் இறை மறை கூறும் சொல்லை தன்னால் முடிந்தளவு செயலால் செய்பவர்.அண்ணல் பெருமானாரின் அழகிய சொற்களை பின் பற்றும் நிகழ்வாக உழைக்கும் மக்களுக்கு உதவும் நல்லவர் இவரின் சேவையால் எத்தனையோ மக்கள் கவலை இல்லாமல் காலம் கழிக்கின்றனர் இங்கு இயங்கும் அத்தனை சங்கங்கள் அமைப்புகள் அத்தனைக்கும் அனைத்து பொருளுதவியும் அள்ளி வழங்கும் வல்லவர் நல்லவர் அவர் நீடூடி வாழ துஆ செய்வோம் ஆமீன்.

Leave a Reply

Your email address will not be published.


*