பிறேசிலின் மயுனஸ் சிறையில் கலவரம்: 60 பேர் உயிரிழப்பு.

ULM.ஷாஜஹான்

b7f02e5440a2469b88c7438ab76abec0_18பிறேசிலின் அமேசானஸ் பிராந்தியத்திலுள்ள மயுனஸ் நகரத்தில் அமைந்துள்ள அனிசியோ ஜோபிம் சிறைச்சாலையில் பாரிய போதைவஸ்து குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்த இரண்டு குற்றவாளிக் குழுக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் சிக்குண்டவர்களில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

கலவரத்தின் போது சிலரது தலைகள் துண்டிக்கப்பட்டு, உடல்கள் வெளியில் வீசப்பட்டுள்ளது. அத்தோடு 112 பேர் வரை கலவரத்தைப்பயண்படுத்தி தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறேசிலின் சிறைச்சாலையில் அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டு வந்தாலும் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரமாக இது பதிவாகியுள்ளது.

இதற்கு முன் 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறை கலவரமொன்றில் சுமார் 111 பேர் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.1483391271173 be23a991b2844ad7997dda738f4c7a09_18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>