பதவி துறந்தார் இந்தியா கேப்டன் மஹி

Spread the love

fb_img_1483545299177ஏரூர் இஹ்கான்

இந்தியாவின் ஓலைக்குடிசையில் வசிக்கும் சாதாரண விவசாயி தொடக்கம் விண்ணைத்தொடும் குடிமனைகளில் வசிக்கும் ஜியோ நிறுவன உரிமையாளர் அம்பானி வரை உச்சரிக்கப்பட்ட வார்த்தை தான் இது.

2007ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தின் பின் இந்திய கிரிக்கெட் அநாதரவாய் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தை போல கவனிப்பாரற்றுக் கிடந்த தருணம் அது.

சரித்திரத்தோல்வி எனும் அவமான வெள்ளம் தலைக்கு மேல் பாய, அதில் சிக்குண்டு நாதியற்றுப்போயிருந்த இந்திய ரசிகர்களை மீட்க மீட்புப்பணியில் தன்னலம் பாராது தலையைக் கொடுத்த இந்தியர் தான் மஹேந்திர சிங் தோனி.

தலைமைத்துவப் பண்பை மனிதர் எங்கிருந்து கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனால், தலைத்துவப்பண்பில் முழு கிரிக்கெட்டுக்கும் பேராசிரியராகவே ஆகிவிட்டார்.

தோல்விகள் முகத்தில் பளார் என்று அறைந்த போது, மறு கன்னத்தைக் காட்டி தோல்விகளை தோல்வியடையச் செய்து வெற்றி கண்டவர்.

இளம் வீரர்கள் சோபிக்கத்தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓய்வறையை ஆளுமையாகக் கையாண்டு, அவர்களை அச்சுறுத்தல்மிக்க வீரர்களாக செதுக்கிய சிற்பி அவர்.

உலகின் அனைத்துக் கிண்ணங்களையும் வென்ற ஒரே அணித்தலைவர் என்ற கிரீடம் தலையை அலங்கரித்தாலும், எதையுமே சாதிக்காதவர் போன்று மீண்டும் அவற்றை வென்றெடுக்க முனைவதில் தான் அனைவரையும் விஞ்சி கம்பீராமாக நிற்கிறார் தோனி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*