மின்னிணைப்பு பெற்ற தந்த ஷிப்லி பாறுக்கிற்கு நன்றி தெரிவிக்கும் கொண்டையன் கேணி மக்கள் (வீடியோ)

unnamedஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியில் சுமார் 200000 ரூபா பெறுமதியில் தனது தனிப்பட்ட முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத்தொகுதி-கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவு-செம்மண்ணோடைக் கிராம சேவகர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக்கிராமமான கொண்டையன்கேணி கிராமத்திற்கான 150 மீற்றர் நீளமுடைய வீதிக்கான மின்னிணைப்பினைப் பெறுவதற்கான வேலைகள் இடம்பெற்று வருக்கின்றது.

மேலும், அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் குறித்த மின்னிணைப்பு சம்பந்தமாக ஷிப்லி பாரூக் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், மணல் ஒழுங்கைகளாகவுள்ள வீதிகளைச் செப்பனிட்டு மாற்றித்தருமாறும், மீதியாகவுள்ள ஒழுங்கைகளுக்கு மின்னிணைப்பினைப் பெற்றுதரும் பட்சத்தில், ஆரம்பக்கல்வியினை அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கற்கின்ற குறித்த பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களுக்கு பெரும் உதவியாக இருக்குமென்பதை வேண்டி நிற்கின்றனர்.

அத்தோடு, குறித்த வேண்டுகோளை பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நிறைவேற்றித்தரும் பட்சத்தில், அப்பிரதேசத்தில் வசிக்கின்ற சகல மக்களும் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிற்கே வாக்களிக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மறுபக்கத்தில் கடந்த மாகாண சபைத்தேர்தலில் கல்குடாப்பிரதேசத்து மக்கள் ஒன்பது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிற்கு வழங்கியுள்ளமையினால், கல்குடா பிரதேசத்தின் அபிவிருத்திகளில் பெரும் பங்காற்ற வேண்டிய பொறுப்பு ஷிப்லி பாரூக்கிற்கு இருப்பதாகவும், அதனை அவர் அல்லாஹ்விற்குப் பயந்து நடக்கின்ற அரசியல்வாதி என்ற அடிப்படையில் முடிந்தளவு நிறைவேற்றி வருவதாகவும், மேலும், பல அபிவிருத்திகளை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்வார் என்ற தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சமூக ஆர்வலராகவும் பிரதேசத்து மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்தி, தீர்வுகளுக்காக நகர்த்தி வரும் சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.

வீடியோ மக்களின் நன்றியும் வேண்டுகோளும்:-
www.youtube.com/watch?v=eE3rWYvC-P0&feature=youtu.be
unnamed %e0%ae%9a%e0%ae%95%e0%af%8d %e0%ae%b5%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%af%8d

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*