பயண வாகனமொன்றை(Bus)க் கொள்வனவு செய்ய கட்டார் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கும் நூற்றாண்டைக் கொண்டாடும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை

Spread the love

15978932_1385212184831034_254010643_nஎம்.ஐ.லெப்பைத்தம்பி

கட்டார் வாழ் சகோதரர்களுக்கு…

ஓட்டமாவடி தேசிய பாடசாலை எதிர்வரும் மார்ச் மாதம் நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள நிலையில், அதனை வெகுவிமர்சையாகக் கொண்டாடுமுகமாக அதன் பழைய மாணவர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாத்தினர், ஊர் நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள் எனப்பல தரப்பினரும் தம்மாலான முழு நடவடிக்கைகளையும் முழு மூச்சாக இரவு பகல் பாராது மேற்கொண்டு வருகின்றனர்.

நூற்றாண்டு விழா செயற்றிட்டத்தில், பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவுறும் நிலையில், அந்த நூற்றாண்டு விழாவுக்கு பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்பையும் நிதியுதவிகளையும் எதிர்ப்பார்த்து நிற்கின்றது ஓட்டமாவடி தேசிய பாடசாலை.

இதனை ஒரே நோக்காகக் கொண்டே இப்பாடசாலையில் கல்வி கற்று கட்டார் நாட்டில் தொழில் புரியும் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க காட்டார் கிளை கடந்தாண்டின் பிற்பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்கு காட்டாரிலுள்ள பழைய மாணவர்களும் பழைய மாணவர் அல்லாத சகோதரர்களும் ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், நாம் கல்வி கற்ற பாடசாலை பல்வேறு தேவைப்பாடுகளுடனும் குறைபாடுகளுடனும் நூற்றாண்டைத் தொட்டு நிற்பதை எண்ணி, அதன் தேவைகளில் முக்கியமானவொன்றாகக் காணப்படும் மாணவர்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான பஸ் வண்டியொன்றை கட்டாரிலுள்ள பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் நிதிப்பங்களிப்புடனும் கொள்வனவு செய்து வழங்கும் நன்னோக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த பஸ் வண்டியைக் கொள்வனவு செய்யத் தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்ளும் நோக்குடன், பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை நினைவுறுத்தும் பாடசாலையின் இலட்சினை பொறிக்கப்பட்ட டீ சேர்ட், தொப்பி , பேனா போன்றவற்றை விற்பனையில் குறிப்பிட்ட சில சகோதரர்கள் பல்வேறு வேலைப்பழு சிரமங்கள் கஷ்டங்களுக்கு மத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முயற்சியின் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருவதனாலும் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காமையினாலும் இதனை மிக மிக அவசரமாகவும் அவசியமாகவும் செய்து முடிக்க வேண்டிய கடப்பாடு இந்த பாடசாலையின் பழைய மாணவர்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையுமாகும்.

இப்பாடசாலை தந்த கல்வியூடாகவே நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்குவதுடன், பொருளாதார ரீதியிலும் நல்ல நிலையிலும் உள்ளோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திச் செயற்பட வேண்டியதும் இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்தேற ஒத்துழைப்பு வழங்குவதும் அவசியமாகும். இது கட்டாரிலுள்ள நம் ஒவ்வொருவர் மீதும் பாரிய பொறுப்பும் பணியும் என்பதை மனதில் இருத்திச் செயற்படுவோம்.

குறித்த நூற்றாண்டு விழாவுக்கு குறிப்பிட்ட சில காலங்களே உள்ள நிலையில், நாம் நமது பாடசாலையில் கற்கும் எமது எதிர்கால சந்ததியினரின் நன்மையினையும் கல்வி முன்னேற்றத்தினையும் கருத்திற்கொண்டு கட்டார் பழைய மாணவர் சங்க கிளையினராகிய நாம் முன்னெடுத்துள்ள பஸ் கொள்வனவுத் திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கு ஒத்துழைப்புக்களைக்கோரி நிற்கின்றோம்.

இதற்கான நிதி சேகரிப்பு பணியில் சகோதரர் ரிபாய்தீன் சிராஜி போன்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதுடன், பழைய மாணவர்கள் என்ற வட்டத்தையும் தாண்டி அயல்நாட்டவர்கள், ஒரே அலுவலகங்களில் பணி புரிபவர்கள் என அனைவருக்கும் மிகக்கூடுதலான டீ சேர்ட்களை விற்பனை செய்து நிதி திரட்டலில் மும்முரமாகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அவர்களின் அர்ப்பணிப்புடனான பணிகளை இறைவன் பொருத்திக்கொள்வானாக.

இந்த வழி முறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு குறித்த பஸ் வண்டிக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைத் திரட்டிக் கொள்ள முன் வர வேண்டியது அவசியமாகும்.

15978932_1385212184831034_254010643_n15942076_1385212228164363_127318003_n 15942387_1385212484831004_1694762904_n 15942394_1385212564830996_969481621_n 15970138_1385212261497693_1060376328_n 15970158_1385212491497670_578153358_n 15970164_1385212714830981_1862896656_n 15978875_1385212314831021_1714489281_n 15979058_1385212328164353_2113123727_n 15979126_1385212494831003_752659435_n 15995449_1385212181497701_1449465503_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*