அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற திட்டம்-டொனால்ட் டிரம்புக்கு பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் கடிதம் .

jerusalem_wbilஇஸ்ரேலிய நகரான டெல் அவிவ் இல் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை,ஜெருசலம் நகருக்கு மாற்றும் திட்டத்தை கைவிடுமாறு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது பாலஸ்தீன இஸ்ரேலிய அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறி இருக்கிறார்.

டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரி்க்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் பல முறை கூறி வந்திருக்கிறார். மேலும் டேவிட் பிரட்மேன் என்ற வக்கீலை, புதிய அமெரிக்க தூதராக நியமிக்க இருப்பதாவும் கூறி இருக்கிறார். பிரட்மேனும் தூதரக இடத்தை மாற்றும் திட்டத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

தூதரகத்தை மாற்றுவதால் இரு நாட்டு உறவுகள் மற்றும் அமைதி எந்த அளவு பாதிக்கும் என்பதை அப்பாஸ் டிரம்புக்கு கடிதம் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.

மேலும் ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கும் இது குறித்து அப்பாஸ் கடிதம் எழுதியுள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்திருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*