அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பாரக் ஒபாமா மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரை.

Spread the love

obama35-600-11-1484102680அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்கவுள்ளார். அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பாரக் ஒபாமா அதிபராக தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் சிகாகோவில் உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், நான் சிறந்த அதிபாரக இருந்ததில் மக்களுக்குப் பெரும் பங்குள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றமேற்படும். மாற்றத்தை நோக்கிச் சென்ற என் பயணத்தில் இரண்டு அடி முன்னேடுத்து வைத்தால் ஒரு அடி சறுக்கிப் பின்னே வந்ததை ஒப்புக் கொள்கிறேன்.

நான் அதிபராக பதவியேற்றபோது இருந்ததை விட அமெரிக்கா தற்போது மேலும் வலுவான நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் செயல்பட முடியாது.

இனத்தால் நம் சமூகம் பாகுபாடு கொண்டிருக்கிறது. தீவிரவாதம் நமது பாதுகாப்பை மட்டுமல்ல ஜனநாயகத்தையும் சோதித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எந்தத் தீவிரவாத அமைப்பும் நம் நாட்டில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தவில்லை.

கடந்த சில வாரங்களாக எனக்கும், மிஷலுக்கும் வந்து குவியும் வாழ்த்துக்களால் மகிழ்ச்சியடைந்துள்ளோம். பொறுப்பை எந்தப் பிரச்சனையுமின்றி ஒப்படைப்போம் என்பதை டிரம்புக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.(S)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*