வாழைச்சேனை ஹைராத்தில் மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு

03கல்குடா செய்தியாளர்

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (11.01.2017) தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்குச் சேர்க்கப்பட்ட மாணவர்கள் தரம் இரண்டு மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர் ஏ.பி.எம்.ஹைதர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல்.ஏ.ஜூனைட் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.அன்வர் சாதாத், பொலிஸ் உத்தியோகத்தர் எச்.எம்.எஸ்.அஹமட் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப்பிரதிநிதிகள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன், தரம் ஒன்றில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.01 02 03 04 05 06 07 10 12 13 14 15 16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*