வாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு

20170111_082044(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் இயங்கி வரும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் 2017ம் ஆண்டிற்கான தரம் 1 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இன்று 11.01.2017ந் திகதி பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் வித்தியாலய முன்றலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவிகள் புதிதாக தரமொன்றிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவிகளுக்கு பூ மாலை அணிவித்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.20170111_081956 20170111_082044 20170111_082345 20170111_082453 20170111_084127 20170111_084234 20170111_085414

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>