காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் தரம் – 01 புதிய மாணவர்களை வரவேற்கும் பிரதான நிகழ்வு-படங்கள்.

Spread the love
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
unnamed-1மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் தரம்-01 புதிய மாணவர்களை வரவேற்கும் பிரதான நிகழ்வு 11-01-2017 இன்று புதன்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தரம்-01 புதிய மாணவர்களை வரவேற்கும் பிரதான நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாஹீம், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.சரீப், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏம்.ரீ.எம்.அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதம அதிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் உள்ளிட்ட அதிதிகளினால் ஸாவியா மகளிர் வித்தியாலய தரம்-01 புதிய மாணவ,மாணவிகள் தொப்பி அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
இங்கு ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை,சிரேஷ்ட கணிதப் பாட ஆசான் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி,காத்தான்குடி 1ம் குறிச்சி பெரிய மீரா ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ,ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் என்.எம்.ஏ.கரீம் உட்பட அதன் உறுப்பினர்கள், ஸாவியா மகளிர் வித்தியாலயஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(F)unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-6 unnamed-7 unnamed-8 unnamed-9 unnamed-10 unnamed-11 unnamed-12 unnamed-13 unnamed-14 unnamed-15

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*