கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Spread the love

IMG-20170115-WA0002(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் 2016 ல் க.பொ.த சாதரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒரு வார கால இஸ்லாமிய செயமலர்வு அண்மையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் இறுதி நாளான்று இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் கலந்து கொண்ட மாணவிகளுக்கான பணப்பரிசும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 14.01.2017 ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் ஜம்இய்யாவின் தலைவரும் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி MA அவர்களின் வழிகாட்டலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாவலடி மர்கஸ் அந்- நூர் அரபு கலாபீட அதிபர் ஏ.ஹபீப் காஸிமி அவர்கள் கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி, மௌலவி வீ.ரீ.எம். முஸ்தபா தப்லீகி, அப்துர்ரகுமான் அஸ்ஹரி, ரீ.எல்.அமானுல்லாஹ் ஸர்கி, எம்.எல்.இப்ராஹீம் மதனி, ஆசிரியர்களான எம்.எஸ்.எம்.இப்றாஹீம், எச்.எல்.முஹைதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.20170115_163942 20170115_164022 20170115_164155 20170115_165258 20170115_171601 IMG-20170115-WA0001 IMG-20170115-WA0002 IMG-20170115-WA0003 IMG-20170115-WA0004 IMG-20170115-WA0005 IMG-20170115-WA0006 IMG-20170115-WA0007

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*