விரைவில் இளம் எழுத்தாளர் மாநாடு!

Spread the love

(SH.H.M Arafath- MSM.ஸாகிர்)
NNNNNNஅகில இலங்கை இளம் எழுத்தாளர் மாநாடு மார்ச் மாத நடுப்பகுதியில் வெகு கோலாகலமாக கொழும்பில் நடைபெறும்.இத்தகவலை அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனத் தலைவர் கலைஞர் எம். நிஜாமுதீன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கொழும்பில் முழுநாள் நிகழ்ச்சியாக இம்மாநாட்டு நிகழ்ச்சி அமையும். கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் ஆகிய அரங்கங்களோடு இளம் எழுத்தாளர்கள் முப்பது பேர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.
மாநாட்டில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படும். மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தும் பொருட்டு கலை இலக்கியவாதிகள், வானொலிக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆதரவும் பெறப்பட்டுள்ளது. அதிதிகளாக அமைச்சர்கள், புரவலர்கள், அறிஞர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இந்த மாநாட்டில் பேராளராகப் பங்கு கொள்ள விரும்புவோர் எம். நிஜாமுதீன்(தொலைபேசி இலக்கம்: 077 – 5108350),செயலாளர் ஐ.ஏ. காதிர்கான், மத்திய மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஷீத் எம். றியாழ் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

மாநாட்டின் ஆலோசகராக “காவ்யாபிமானி” கலைவாதி கலீல் செயல்படுவார். பல வருட இடைவெளியின் பின்னர் இளம் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*