O/L  மாணவர்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

unnamed (5)கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கொழும்பு இஸ்லாமிய முஸ்லீம் வாலிபர் ஒன்றியம் (ஜம்இய்யதுஸ் ஷபாப்) அமைப்பின் அனுசரணையோடு இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான ஒரு நாள் இஸ்லாமிய வழிகாட்டல்  கருத்தரங்கு நேற்று 29ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் கல்விக்கான இணைப்பாளர் எம்.எல். இப்ராகீம் மதனி அவர்களின் நெறிப்படுத்தளில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல். பீர் முகம்மட் காசிமி, செயலாளரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச். அரபாத் ஸஹ்வி, தாருஸ்ஸலாம் கலாபீட விரிவுரையாலர் ஏ.எல்.முஸ்தபா ஸலாமி, மௌலவி ஆசிரியர் ரீ.எல். அமானுல்லாஹ் ஷர்கீ ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.(F)unnamed (1) unnamed (2) unnamed (4) unnamed (5) unnamed (7) unnamed

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*