வாழைச்சேனை ஆயிஷாவைப் பிரிப்பதலில் அமீர் அலியுடன் சேர்ந்து செயலாற்றியதற்காகவே முஸ்லிம் காங்கிரஸினால் ஆயிஷா பாலிகா புறக்கணிக்கப்படுகின்றது-அதிபர் எம்.ரீ.எம்.பரீட் (வீடியோ)

Spread the love

16441638_1263710860385912_726575534_nஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலிருந்து ஆயிஷா பெண்கள் பாடசாலையினை பிரதியமைச்சர் அமீர் அலியுடன் சேர்ந்து பிரித்தெடுப்பதற்கு தானும் அமீர் அலிக்கு விசுவாசமாக இருந்துள்ளேன் என நினைத்தே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆயிஷா பாலிகாவிற்குத் தேவையாகவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்டுகொள்வதில்லை என முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர்பீட உறுப்பினரும், இரண்டு முறைகள் கல்குடா பிரதேசத்தில் பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியவரும், கல்குடா தொகுதி முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், தற்போதைய வாழைச்சேனை ஆயிஷா பாலிகாவின் அதிபருமான எம்.ரீ.எம்.பரீட் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த அதிபர் எம்.ரீ.எம்.பரீட், தான் எங்கும் பிரதியமைச்சர் அமீர் அலியினை ஆதரித்து கூட்டங்களில் உரையாற்றியதோ அல்லது அவருக்காக கூட்டங்களை நடாத்தியதோ கிடையாது. அதனால் தனக்கு அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்புக்களிலும் தான் ஈடுபடவில்லையென பிரதியமைச்சர் அமீர் அலி நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் எது எப்படியிருந்தாலும் அரசியல் பணிகளிலிருந்து தான் ஒதுங்கியிருக்கின்றேன். ஆகவே, இதனைக்கருத்திற்கொண்டு எமது பாடசாலைக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை எல்லோரும் கட்சி பேதங்களுக்கப்பால் நின்று ஏற்படுத்தித்தர வேண்டுமென தனது கருத்தினைத் தெரிவித்தார்.

மேற்கூறிய கருத்துக்களை முஸ்லிம் காங்கிரசின் கோடையாகக் கருதப்படுகின்ற வாழைச்சேனை பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரசினால் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு எந்த அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனக்கூறுகின்ற இந்நிலையில், வாழைச்சேனை பிரதேசத்து மக்கள் அதிகளவிலான வாக்குகளை கடந்த மாகாண சபைத்தேர்தலின் பொழுது தற்போதைய மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட்டிற்கு வழங்கியிருக்கின்ற நிலையிலும் முதலமைச்சரின் ஆதிக்கம் வாழைச்சேனைப் பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகின்ற நிலையிலும், நீங்கள் அதிபாராகவுள்ள ஆயிஷா பெண்கள் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளில் ஏன் முதலமைச்சர் கவனஞ்செலுத்துவதில்லை என்ற கேள்விக்கே அதிபர் பரீட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் எம்.ரீ.எம்.பரீட் அதிபரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளான

01- வாழைச்சேனை பிரதேசத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக முக்கிய பங்காற்றியுள்ள நீங்கள், இரண்டு முறைகள் பாராளுமன்ற வேட்பாளராகவுமிருந்து கட்சியின் அதி உயர்பீட உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளீர்கள். தற்பொழுது அரசியலில் நீங்கள் அமைதி காத்து வருகின்றமைக்கான உண்மைக்காரணம் என்ன?

02- அந்நூர் தேசிய பாடசாலையிலிருந்து ஆயிஷா பெண்கள் பாடசாலை பிரிந்து சென்றமையான விடயத்தில் நீங்கள் ஆயிஷா பாடசாலைக்கு அதிபராக வந்தமை உங்களின் அரசியல் வளர்சிக்குப் போடப்பட்ட கால் கட்டாக பிரதேசத்தில் பேசப்படுவது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

03- உண்மையாகவே வாழைச்சேனைப் பிரதேசத்திற்கு தனியான பெண்கள் பாடசாலையின் தேவை கடந்த 2009ம் ஆண்டு இருந்ததா? அல்லது இன்னும் காலம் தாழ்த்தி சில வருடங்களுக்குப் பிற்பாடு சகல வசதிகளுடனும் இரண்டு பாடசாலைகளும் இருக்கதக்கவாறு பிரித்திருக்கலாம் என நினைக்கின்றீர்களா?

04- நீங்கள் தற்பொழுது அதிபராகவுள்ள ஆயிஷா பெண்கள் பாடசாலைக்குத் தேவையாகவுள்ள குறைகளை எவ்வாறு எதிர்காலத்தில் தீர்த்து வைக்க முடியும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

05- இரண்டு முறைகள் கல்குடா பிரதேசதிற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு நீங்கள் பாராளுமன்ற வேட்பாளராகக் களமிறங்கியதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், நீங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதானது, வாழைச்சேனை பிரதேசத்தில் அரசியல் தலைமைத்துவத்தின் குறைபாட்டினைக் காட்டுகின்றதா? அல்லது நீங்கள் தலைமைத்துவத்தினை உருவாக்கி விட்டுத்தான் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கின்றீர்களா?

06- உங்களுடைய அரசியல் வரலாற்றில் முக்கிய பிரச்சனையாகவும் விடயமாகவும் பார்க்கப்படுகின்ற 2001ம் ஆண்டு கல்குடாவின் பிரதிநிதித்துவதிற்கு சவாலாக ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறக்கப்பட்ட யூ.அஹமட்டிற்கெதிராக நீங்கள் களமிறக்கப்பட்டு, அன்று கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது சம்பந்தமாக விரிவாகக் கூற முடியுமா?

07- வாழைச்சேனை பிரதேசத்தின் முக்கிய பிரச்சனையாகவுள்ள தனியான பிரதேச சபையானது, அரசியல்வாதிகளினால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

08- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடனும், தலைமையுடனும் நீண்ட உறவினையும் முக்கிய பதவிகளிலும் இருந்த உங்களால் ஏன் வாழைச்சேனை மக்களின் உரிமைக்குரலாக ஒலிக்கின்ற விடயமாகவுள்ள தனியான பிரதேச சபையினைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது?

09- அரசியல் காலங்களில் வாழைச்சேனை பிரதேச மக்களை வழி நடத்துபவர்கள் எவர்கள்.? என்பது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

10- கல்குடா பிரதேசத்தில் தலைவிரித்தாடுகின்ற பிரதேசவாதம் சம்பந்தமாக உங்களின் கருத்து எதுவாக இருக்கின்றது? அதற்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென நீங்கள் நினைகின்றீர்கள்?

11- 2008ம் ஆண்டு முதற்தடவையாக கிழக்கு மாகாணம் மாகாண சபைத்தேர்தலுக்கு முகங்கொடுத்த வேளையில், நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஓரங்கட்டப்பட்டமைக்கான காரணம் என்ன?

12- குறித்த மாகாண சபைத்தேர்தலில் எல்.ரீ.எம்.புர்கான் அதிகளவான வாக்குகளைப் பெற்றிருந்தும், இஸ்மாயில் ஹாஜிக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டமை அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த சரியான முடிவு என நீங்கள் நினைக்கின்றீர்களா?

13- வாழைச்சேனை பிரதேசமானது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருப்பது ஒரு புறமிருக்க, வாழைச்சேனை பிரதேசமானது தேர்தல் காலங்களில் விலை போகின்றது என பரவலான பேச்சு பிரதேசத்திலிருக்கின்றது. இது சம்பந்தமான உங்களின் கருத்து என்ன?

14- கடைசியாக வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையானது, கல்குடா அரசியல் தலைமையான அமீர் அலியினால் தான் முடியும் அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தான் முடியுமென்பதில் நீங்கள் எந்தப்பக்கத்தில் இருக்கின்றீர்கள்?

போன்ற முக்கிய கேள்விகளுடன் இன்னும் பல கேள்விகளுக்கு முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினரும் இரண்டு முறைகள் கல்குடா பிரதேசத்தில் பாராளுமன்ற வேட்பாளராக களமிறங்கியவரும், கல்குடா தொகுதி முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், தற்போதைய வாழைச்சேனை ஆயிஷா பாலிகாவின் அதிபருமான எம்.ரீ.எம்.பரீட் தெரித்த விரிவான, சமகால அரசியலில் தாக்கஞ்செலுத்தக்கூடியதும், மக்களின் சிந்தனைக்குத் தேவையான கருத்துக்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

16441638_1263710860385912_726575534_n 16426710_1263713443718987_1366310520_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*