கல்குடாவுக்கு அரசியல் அங்கீகாரம் தந்தது முஸ்லீம் காங்கிரசே: நாசகாரிகளுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகவுள்ளார்கள்–அன்வர் நௌஷாத்

Spread the love

ச“கல்குடாவிற்கு அரசியல் அங்கீகாரம் தந்தது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான். இந்நிலையில், முஸ்லீம் காங்கிரஸ் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும் நாம் மிகக்கவனமாக இருக்கின்றோம். கண்டபடி முஸ்லீம் காங்கிரசை தூசிப்பதனூடாக மக்கள் மனங்களிலிருந்து கட்சியையும் அதன் தலைமையையும் யாரும் அசைக்க முடியாது” என காஸ்ட்ரோ (CASDRO) அமைப்பின் தலைவரான அன்வர் நௌஷாத் தெரிவித்தார்.

கல்குடாவின் ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பிலான கருத்துரையாடலொன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களினூடாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனமே எமது தொகுதிக்கு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் தற்போதைய பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் மூலமாக நமக்கான வெற்றியைத் தந்துள்ளது. இருப்பினும், தற்போதைய சூழலில் நாம் கட்சியினூடான அதிகாரத்தை இழந்துள்ளோம். இருப்பினும், எதிர்காலம் எமக்கு மிகப்பிரகாசமாக அமையுமென்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

நமது தொகுதியின் முஸ்லீம் பிரதேச அரசியலை ஒரு கட்டமைந்த நிலைக்கு மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. சமூகத்தை நேசிப்பவர்களாலும், கட்சியின் ஆரம்ப காலப்போராளிகளை ஓன்று சேர்ப்பதனூடாகவும் நாம் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கட்சியின் ஆரம்ப காலப் போராளிகள், அவர்களின் பிள்ளைகள் கட்சியினூடான நலன்களை அனுபவிப்பதற்கான நுட்பங்களை நாம் வகுத்திருக்கின்றோம். அவர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். நமது கட்சியின் தலைமைக்கும், அதிகாரம் கொண்ட பொறுப்புமிக்கவர்களுக்கும் நாம் அவர்களை அடையாளம் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் நமது மண்ணில் மக்களை அதிகாரம் கொண்ட பிரதிநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும், நிவாரணங்களையும் வழங்க நாம் தயாராகவுள்ளோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*