விஷேட தேவையுடையோர் பாடசாலையினை JDIK பொறுப்பேற்பு.

Spread the love

(எச்.எம்.எம்.பர்ஸான்)
12233
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் சுமார் பத்து வருட காலமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின்  நிர்வாக செயட்பாட்டின்கீழ்  இயங்கி வருகின்ற விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையினை இன்று 11.02.2017ம் திகதி கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதன் போது புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது.

தலைவராக சட்டத்தரணி ஹபீப் ரிபான் தெரிவு செய்யப் பட்டதோடு, உப தலைவராக தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனியும் செயலாளராக வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும்  எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக எம்.பீ.எம். ஜஃபர் தெரிவு செய்யப்பட்டதோடு உறுப்பினர்களாக ஏ.கே.எம்.சர்ஜூன், மௌலவி ஏ.எல்.முஸ்தபா சலாமி ஏ.எல்.பதுர்தீன் ஸஹ்வி, மற்றும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபர் ஏ.ஹபீப் காஸிமி, ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக், சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நசீர், ஆசிரியர் ஏ.எம்.எம். உவைஸ் ஆகியோர்கள் ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் முன்நிலையில் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந் நிகழ்வுக்கு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.பீர்முஹம்மட்  காசிமி உட்பட பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 9a144efc-9280-46c8-b507-2b5d14c6c3bf 9ed90228-151e-4abc-b7b6-9be2ae2e556d 74e6703d-0dfb-4514-b7ab-995208eec5ff 74f1dbea-171a-4e4d-9df8-f2e28001df21 901d19b7-d089-4f1a-820e-540e1086d3b3 e0df6d84-387b-4f7a-8c1e-ee9efb996495 edbee4c1-9a12-4d69-b7d7-5e5a7d48960b f2b445d1-1a0f-4551-893e-e4f6ba6f0771

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*