“தூக்கமே உடலுக்கு நலன்” – உலக சுகாதார தின சிறப்புக்கட்டுரை

imagesபிர்தெளஸ் ஹனிபா-கல்முனை! 
ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம். தூக்கமின்மை (Insomnia) குறைபாடுகளுக்கு என்ன காரணம்? என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
தூக்கமின்மை என்பது ஒரு குறைபாடு. தூக்கமின்மை, நோயின் அறிகுறி தானே தவிர, அதுவே நோயல்ல. ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமான காரணிக்கலவை, தூங்க விடாமல் தடுக்கிறது. அந்தக்கலவையில் உடல் சம்பந்தப்பட்டவை, உள்ளம் சம்பந்தப்பட்டவை, தீய பழக்க வழக்கங்கள், உட்கொள்ளும் மருந்துகள் எனப்பல காரணங்கள் இருக்கலாம்.
தேசிய தூக்க அறக்கட்டளை தரும் தகவல்களின்படி, சரியான தூக்கம் வராததற்கு, பணி நேர மாறுதல், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள், சுவாசித்தல் தொடர்பான பிரச்சனைகள், ஹைபர் தைராய்டிஸம், மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், தூங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப சாதனங்கள் என பட்டியல் நீள்கிறது.
தூக்கமின்மையின் வகைகள்:
ட்ரான்சியன்ட் இன்சோம்னியா (Transient Insomnia) – சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை மட்டுமே தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள்.
அக்யூட் இன்சோம்னியா (Acute Insomnia) – இது குறைந்த கால இன்சோம்னியா எனப்படும். அக்யூட் இன்சோம்னியாவின் அறிகுறிகள் சில வாரங்கள் வரை நீடித்திருக்கும்.
க்ரோனிக் இன்சோம்னியா (Chronic Insomnia) – இது சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை நீடித்திருக்கும்.
தூக்கத்து இதெல்லாம் எமன்:
மது, தூண்டும் இரசாயணங்கள், வலி நிவாரணி மருந்துகள், சில தைராய்டு மருந்துகள், கருத்தடை மாத்திரைகள், சோர்வு நீக்கிகள், இதய நோய் மருந்துகள் போன்றவைத் தூக்கத்துக்கு எமன்.
மது, தூக்க மாத்திரை போன்றவை தூக்கத்தைத் தூண்டுபவை போல தோற்றம் ஏற்படுத்தினாலும், அந்தத்தூக்கம் தொந்தரவுக்குரிய, அடிக்கடி கலைந்து விடுகிற தூக்கமாகவும் இருக்கும். கலைந்த தூக்கத்தை மீட்டெடுக்க வெகு நேரமாகும்.
தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வது, கடின உழைப்பை மேற்கொள்வது, சாக்லேட், காபி, பாலேடு, டைரோசின் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியவற்றை உண்பது இதயத்துடிப்பை அதிகமாக்கித் தூக்கத்தைக் கெடுக்கும். நினைத்த நேரத்தில் தூங்குவதும், எழுந்திருப்பதும் உடலின் தூக்க சுழற்சி (Sleep Cycle) அமைப்பைக் குழப்பி, தூக்கத்தைக் குறைக்கும். ’தூக்கம் வரலையே’ என ஓவராகக் கவலைப்பட்டாலும் தூக்கமின்மை அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>