கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ரமழான் கால விஷேட செயலமர்வு

Spread the love

DSC_2285எச்.எம்.எம்.இத்ரீஸ்
வருடா வருடம் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலை மாணவா், மாணவியர் மத்தியில் தூய இஸ்லாமிய போதனைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கிலும் ரமாழான் காலத்தை இஸ்லாம் போதிக்கும் முறையில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனும் நோக்கிலும் ரமழான் கால இஸ்லாமிய விஷேட செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.

மேற்படி செயலமர்வுகள் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாகத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ ஹபீப் (காஷிமி) அவா்களின் பங்குபற்றுதலுடன், கல்விப்பகுதி இணைப்பாளா் அஷ்ஷெய்க் MLM.இப்றாஹீம் மதனி அவா்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மாணவியர்களுக்கான செயலமர்வு கடந்த 29.05.2017ம் திகதி முதல் நேற்று 04.06.2017ம் திகதி வரை வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில் அதிதியாக ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய அதிபர் எம்.ஸாபிர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாகத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காஷிமி), கல்விப்பகுதி இணைப்பாளா் அஷ்ஷெய்க் MLM.இப்றாஹீம் மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய உயர்தர மாணவிகள் கலந்து கொண்ட செயலமர்வில், விரிவுரையாளராக அஷ்ஷெய்க் எச்.எல்.முஹைதீன் பலாஹி கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

செயலமா்வின் இறுதியில் பரீட்சை நடாத்தப்பட்டு பெறுமதிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

DSC_2261 DSC_2269 DSC_2278 DSC_2281 DSC_2285unnamed தத் DSC_2297 DSC_2299

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*