கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் மீராவோடை அல்ஹிதாயாவில் ரமழான் கால விஷேட செயலமர்வு

Spread the love

DSC_2393எச்.எம்.எம்.இத்ரீஸ்
வருடா வருடம் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலை மாணவா், மாணவியர் மத்தியில் தூய இஸ்லாமிய போதனைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கிலும் ரமாழான் காலத்தை இஸ்லாம் போதிக்கும் முறையில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனும் நோக்கிலும் ரமழான் கால இஸ்லாமிய விஷேட செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.

மேற்படி செயலமர்வுகள் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாகத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ ஹபீப் (காஷிமி) அவா்களின் பங்குபற்றுதலுடன் கல்விப்பகுதி இணைப்பாளா் அஷ்ஷெய்க் MLM.இப்றாஹீம் மதனி அவா்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.

மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலய மாணவியர்களுக்கான செயலமர்வு கடந்த 03.0.2017ம் திகதி முதல் 10.06.2017ம் திகதி வரை வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

இச்செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாகத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ ஹபீப் (காஷிமி), கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் செயலாளர் எஸ்.எச்.எம்.அறபாத் சஹ்வி, கல்விப்பகுதி இணைப்பாளா் அஷ்ஷெய்க் MLM.இப்றாஹீம் மதனி, மெளலவி அஷ்ஷெய்க் ரீ.எல்.அமானுல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் சிறப்புரைகளும் இடம்பெற்றதுடன், விரிவுரையாளராக அஷ்ஷெய்க் எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

ரமழான் கால இஸ்லாமிய விஷேட செயலமர்வுகளின் இறுதியில் இடம்பெறும் பரீட்சையில் முதல் நிலைப்புள்ளிகளைப் பெறும் மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
DSC_2365 DSC_2379 DSC_2382 DSC_2393 DSC_2396 DSC_2402 DSC_2408 DSC_2411 DSC_2420 DSC_2428 DSC_2435

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*