கொள்கை வெறியர்களால் குறி வைக்கப்படும் கட்டார்

Untitled-1Fahmy Mohamed (MPhil,LLB(Hons)Solicitor & Political & Human Rights Resear)

மத்திய கிழக்கின் வேகமான பொருளாதார வளர்ச்சியும் அதிகமான ஆசிய நாட்டவரின் தொழில் மையமாக கட்டார் விளங்குகிறது. கட்டார் சுமார் 2675522 மக்கள் தொகையைக் கொண்டது. 2010 ம் ஆண்டை விட சுமார் அரை மடங்கு மக்கள் குடியேற்றத்தை வேகமாக 2017ல் அதிகரித்துள்ளது. இதில் சுமார் 82 சத வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள்.
குறிப்பாக,
26.7% -இந்தியர்
18.1% -கட்டார் பூர்வீகள்
11% பிலிப்பைன்ஸ்
11.9% -வங்களாதேஷ்
6.8%- இலங்கையர்
5.6%-பாகிஸ்தான்
29.7%- ஏனைய நாட்டவர்கள் வாழ்கின்றனர். இலங்கையர் சுமார் 125000 பேர் தற்போது பல்வேறு துறைகளில் தொழில் புரிகின்றனர்.

கடந்த வருட பொருளாதார வருமானமாக சுமார் 170.15 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது. பெற்றொலியம், கப்பல் கட்டுமானம், கட்டடத்தொழில், இரும்பு, உருக்கு, உயர்தர வாயு மற்றும் உரம் என்பன முக்கிய வருமான மூலமாகவுள்ளது. இவர்கள் அதிகமான தென் கொரியா, யப்பான் மற்றும் சீனாவிற்கு சுமார் 78% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 9% உற்பத்திகள் மட்டுமே ஏற்றுமதியாகிறது. அதே நேரம், இறக்குமதியில் 14% மட்டுமே அமெரிக்காவின் பங்குள்ளது. சுமார் 56 சத வீதமானவை ஐரோப்பிய நாடுகளிலிருந்தே இறக்குமதியாகிறது. அதிகமாக உணவுப்பொருட்கள், மருத்துவப்பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்களே இறக்குமதியாகின்றது. கடந்த வருடம் மட்டும் சுமர் 38 பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

அரேபிய நாடுகள், முதலாளித்துவ மற்றும் சோசலிச நாடுகளுடனும் மிகவும் நெருக்கமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வேகமாக வளர்ச்சி கண்ட பெருமைக்குரிய நாடு.

குறிப்பாக ஈராக், சிரியா மற்றும் லிபியா மீதான தாக்குதல்கள் மற்றும் போர் நடவடிக்கையில் அமெரிக்க சார்புக்கொள்கையை அணுசரித்தது. அத்துடன், அமெரிக்காவின் இராணுவச் செயற்பாடுகளுக்கு தளமாகவும் இருந்து வருகின்றது.

Saudi Arabia, Egypt, Bahrain, The United Arab Emirates, Libya, Yemen மற்றும் Maldives நாடுகள் தற்போது வெளியுறவுத் தொடர்புகளைத் துண்டித்துள்ளது. இது 2.7 மில்லியன் தொகையுடைய சிறிய மற்றும் பலமான நாட்டை எந்தளவு பாதிக்குமென்பதே கேள்விக்குறி?

மேற்குறிப்பிட்ட சனத்தொகை மற்றும் பொருளாதாரத் தரவுகளின்படி கட்டார் மீதான அழுத்தம் வெளிநாடுகளையும், வெளிநாட்டவரையுமே அதிகம் பாதிக்கும். ஈராக், சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளைப்போல அல்லாது, கட்டாரின் உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்பு வேறுபட்டது.

இந்நிலையில், கட்டார் விமான சேவை, அல்ஜெஸீரா ஊடகம் மற்றும் 2022ல் நடைபெறவுள்ள உலக கோப்பை உதைப்பந்தாட்டம் என்பனவற்றுடன் உலக வலையமைப்பான skyline போன்றன உடனடியான தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. பங்குச்சந்தை 4% சரிவினையே காட்டுகிறது.

ஆரம்ப காலம் முதல் கட்டாருக்கும் அயல் முஸ்லிம் நாடுகளுக்கிடையேயும் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமே இருந்தது. அதில் முக்கியமானவை
1-Hawar தீவு தொடர்பில் பஹ்ரைனுடன் வருடக்கணக்கில் இழுபறி. 2001 சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது.
2-September 1992 கட்டார்-சவுதி எல்லையில் 3 நபர்கள் படுகொலை
3-1994 யமன் உள்நாட்டுப் போரில் சவுதிக்கு எதிரான கட்டார் நிலைப்பாடு
4-1995 GCC மகாநாட்டில் சவுதி சார்பான செயலாளர் நியமனத்தை எதிர்த்தது. மற்றும் கட்டார் மகாநாட்டை விட்டு வெளியேறியது.
5-1996 & 2005 சவுதி மன்னருக்கெதிரான உள்நாட்டு சதிப்புரட்சிக்கு கட்டார் துணை போனது.

இந்நிலையில், 2013 ம் ஆண்டு கட்டார் மன்னர் தனது 32 வயது நிரம்பிய மகன் Sheikh Tamim bin Hamad Al Thani இடம் ஆட்சியை ஒப்படைத்தார். பல்வேறு சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட புதிய மன்னர் சர்வதேச உறவுகளைப் பலப்படுத்துவதில் ஆர்வங்கட்டினார். குறிப்பாக GCC உடன்படிக்கையில் கட்டார் கைச்சாத்திட மறுத்ததால், March 2014ல் தற்போது போன்ற நிலை உருவானது. பல நாடுகள் உறவுகளை கட்டாருடன் நிறுத்திக் கொண்டது.

தற்போதைய பிரச்சனை பூதாகாரமாகியதற்கு முக்கிய காரணம் டிசம்பர் 2015ல் ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புள்ளாஹ் ஆயுதக்குழுவால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள கட்டார் அரச குடும்பத்தினர் 26 நபர்கள் விடயமாகும். இவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் ஈரானின் அனுசரணையுடன் பூர்த்தியடைந்துள்ளது.

இதற்காக இவர்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டாரால் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப்பணம் தனது அரசாங்கத்துக்கு தெரியாமல் முறையற்ற பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஈராக் அரசு அமெரிக்கா மற்றும் சவுதியிடம் முறையிட்டது. இது தான் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க முக்கிய காரணமாகும்.

இங்கு முக்கியமாக ஷீஆக் கொள்கையாளர்களுடன் கட்டார் கைகோர்த்ததே மற்றைய அரபு நாடுகளை சீற்றம் கொண்டது. மத்திய கிழக்கில் ஷீயா மற்றும் சுன்னி முஸ்லீம்களிடையே நடக்கின்ற ஆயுதப்போராட்டம் இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வெறி கொண்ட ஷீஆக் கொள்கையுடைய இஸ்லாமிய கிலாபத் தீவிரவாதக்குழு அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.

பலஸ்தீனம் மற்றும் முஸ்லீம் நாடுகளில் இயங்கும் சுன்னிப் பிரிவினருக்கு கட்டார் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை உலகறிந்த உண்மை. இருந்தும், கடந்த 2 வருடங்களாக சிறைக்கைதிகளாக இருக்கின்ற கட்டார் நெருங்கிய அரச குடும்ப உறுப்பினர்களை மீட்பது கட்டார் அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.

அதற்காக ஈரானின் துணையை நாடுவதால் கட்டாரை ஷீஆக்கொள்கை ஆதரவான நாடாக முத்திரை குத்த முடியாது. அடுத்து அமெரிக்க புதிய ஜனாதிபதி Donald Trump ன் மத்திய கிழக்கு விஜயம் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. குறிப்பாக, சிரியாவிற்கு அடுத்ததாக மத்திய கிழக்கில் தமது ஆயுத விற்பனைக்கான சந்தர்ப்ப சூழ்நிலையை அமெரிக்கா காய்நகர்த்தக் காத்திருந்தது.

அதே நேரம், துருக்கியில் 2017ம் ஆண்டில் நடந்த மக்கள் கணிப்பு வாக்களிப்பில் வெற்றியீட்டடய புதிய ஜனாதிபதி Tayyip Erdoğan செயற்பாடுகள் மாற்றங்கண்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளை தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான சர்வாதிகார நகர்வுகளை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் ஷீஆக்களுக்கெதிரான கொள்கைகளுக்கு தலைமை தாங்கும் நாடாக தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறார். இதற்காக கட்டாரின் ஈரானுடனான தொடர்பை துருக்கி தனக்கு சந்தர்ப்பமாக்கி சவுதியைத் தூண்டி விட்டுள்ளது.

அதே நேரம், அண்மையில் கைச்சாத்தான சவுதி-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் பல இஸ்லாமிய நாடுகளை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. இதனால் பல நாடுகள் சவுதி அரேபியாவின் கட்டாருக்கெதிரான தீர்மானத்தை ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நவீன பொருளாதார கொள்கைகள் மற்றும் மதச்சார்புக் கொள்கைகளுக்கிடையில் நடக்கின்ற பனிப்போரில் கட்டார் பலியாக்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா சார்பாக கட்டார் இருந்த போதும், அமெரிக்காவின் சுரண்டல் கொள்கைக்காக கட்டாரை சிக்க வைக்க சதி அரங்கேற்றப்படுகிறது.

குறிப்பாக, பல எதிரிகள் சேர்ந்து அமைத்துள்ள தற்காலிக நட்புக் கூட்டாளிகளுக்கு கட்டாரை அடிபணிய வைக்க வேண்டும். இதற்காகவே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டாருக்கு இது புதியதாக இல்லாவிட்டாலும், அதன் வடிவம் புதிய கோணத்தில் உருவாகியுள்ளது கவனிக்க வேண்டியதே.

இந்நிலையில், கட்டார் அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையில் சடுதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆகவே, கொள்கைக்கான கருத்து மோதல்களால் அங்கு தொழில் புரிபவர்களுக்கு உடனடியான எந்தப் பிரச்சனைகளும் இல்லை. இருந்தும், இப்பிரச்சனை நீடிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*