ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Spread the love

DSC_2473(எச்.எம்.எம்.பர்ஸான், பட உதவி எச்.எம்.எம்.இத்ரீஸ்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப்பிரிவு ரமழான் காலத்திலும் மாணவ, மாணவியரின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்காக பாடசாலைகள் ரீதியாக வருடாந்தம் நடாத்தும் ரமழான் கால இஸ்லாமிய செயலமர்வு இம்முறையும் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது.

செயலமர்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கிடையில் இறுதி நாளன்று நடைபெற்ற எழுத்துப்பரீட்சையில் கலந்து கொண்டு சிறந்த புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவியர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று 07.06.2017ம் திகதி புதன்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் ஜம்இய்யாவின் கல்விப்பிரிவு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இப்ராஹீம் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகத்தலைவரும் நாவலடி மார்கஸ் அந்நூர் கலாபீடத்தின் அதிபருமான அஷ்ஷெய்க் ஏ. ஹபீப் காஸிமி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி, ஜம்இய்யாவின் கல்விப்பிரிவு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இப்ராஹீம் மதனி, அஷ்ஷெய்க் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய ஆசிரியர் எம்.ஐ.தெளபீக், அஷ்ஷெய்க் ரீ.எல்.அமானுல்லாஹ், ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாக உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர் ஆகியோரும், ரமழான் கால இஸ்லாமிய செயலமர்வில் பங்கு பற்றிய மாணவிகள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில், இரண்டாவது அமர்வில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலிருந்து குறித்த ரமழான் கால செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழும், பணப்பரிசும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேற்படி முதலாவது அமர்வில் கலந்து கொண்ட அதிதிகளுடன், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ.எம்.கபீர்.எம்.எம்.நஜீப் ஆகியோரும் செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்கள், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

DSC_2437 DSC_2440 DSC_2443 DSC_2444 DSC_2447 DSC_2448 DSC_2449 DSC_2459 DSC_2462 DSC_2463 DSC_2465 DSC_2467 DSC_2468 DSC_2469 DSC_2470 DSC_2471 DSC_2472 DSC_2473 DSC_2474 DSC_2475 DSC_2476 DSC_2480

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வாழங்கும் நிகழ்வு

DSC_2486 DSC_2490 DSC_2493 DSC_2498 DSC_2499 DSC_2501 DSC_2502 DSC_2510 DSC_2514 DSC_2515 DSC_2517 DSC_2518 DSC_2519 DSC_2520 DSC_2521 DSC_2522 DSC_2523 DSC_2526 DSC_2527 DSC_2529 DSC_2530 DSC_2531 DSC_2534 DSC_2537 DSC_2541

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*