கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நோன்புப் பெருநாள் தொழுகை: பெருந்திரளான மக்கள் பங்கேட்பு

Spread the love

DSC_3109எம்.ரீ.எம்.பாரீஸ்

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பெருநாள் தொழுகைகளை நபி வழியில் திடலில் தொழுகை நடாத்தி வரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா இம்முறை நோன்புப்பெருநாள் தொழுகையையும் இன்று 26.06.2017ம் திகதி திங்கட்கிழமை காலை 06.30 மணிக்கு செம்மண்ணோடை அல் ஹம்றா விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது.

ஆண்கள், பெண்கள், சிறியோர், முதியோர் எனப் பெருந்திரளான மக்கள் நோன்புப்பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனா்.

நோன்புப்பெருநாள் தொழுகையினையும் குத்பாவினையும் ஜம்இய்யாவின் பொதுத்தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எல். பீா்முஹம்மது காஸிமி MA அவா்கள் நிகழ்த்தினார்.

தொழுகையின் முக்கியத்துவமும் அதன் பின்னர் இடம்பெறும் குத்பாவின் சிறப்பு பற்றியும் வலியுறுத்திய அவர், பெருநாள் தர்மத்தின் (பித்ராவின்) நன்மைகளையும், கடந்து செல்கின்ற ரமழானில் செய்த அமல்களை விட்டு விடாமல் தொடர்ச்சியாக அதனைத் தொடருமாறும் கேட்டுக்கொண்டார்.

பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பெருநாள் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், தொழுகை மற்றும் குத்பா பிரசங்கங்கள் என்பன கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஊடகப்பிரிவினரால் முகநூல் வழியாக நேரடி அஞ்சல் செய்யப்பட்டது.11070022 11070025 11070029 DSC_3109

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*