கிழக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது- எம்.ஏ சுமந்திரன் தெரிவிப்பு

0
214

தபாறுக் ஷிஹான்
வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாதென பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான 
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்திப்படாத விடயமென கருத்துக்குளை முன்வைத்தமை தொடர்பில் இன்றைய 
தினம் (1) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட 
கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது கருத்தில்,

வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது. எனினும் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு  
எழுத்தில் அச்சிடப்பட்டு இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

குறிப்பாக, வழி நடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் ஈபி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தா  மற்றும் மனோ கணேசன் போன்றோர் வடக்கு கிழக்கு 
இணைப்பை வலியுறுத்தவில்லையெனவும், தமிழ் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்திவருகின்றனர்.

எனவே தான் வடக்கு கிழக்கு இணைக்க வேண்டுமாயின், கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பில்லாது இணைக்க முடியாதென்பதுடன், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றோம்.

இது தவிர, மேலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் இணைந்து மாகாண சபைகளில் கூட்டாச்சி நடாத்தி வருவதாகவும், தமக்கு 11 ஆசனங்களும் 
முஸ்லிம்களுக்கு 7 ஆசனங்கள் இருந்தும், தாம் கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரையே நியமித்தமை குறித்தும் இங்கு அவர் 
கூற விரும்புகின்றேன்.

எனவே, தற்போதுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு சாதகமான கருத்துக்களையே முன்வைத்து வருவதாகத் 
தெரிவித்த சுமந்திரன், தற்போது வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகாவிட்டாலும், எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் அதிகமாக வுள்ளதாக நினைக்கின்றேன்.

எனினும், சிலர் இதனைக்குழப்பும் முகமாக வெளியிலிருந்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இருப்பினும், புதிதாக அமையவுள்ள அரசியில் யாப்பானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வான ஒன்றாகவே அமையவுள்ளதென்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

எனவே தான் தாம் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைத்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி, அரசாங்காத்திற்கு ஆதரவும் வழங்கி வருவதாக 
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here