மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயல் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலமாக்கள் கெளரவிப்பும் நூல் வெளியீடும்

0
286

DSC03804ஓட்டமாவடி செய்தியாளர் எம்.எஸ்.முகம்மது சதீக் 
கிழக்கு மாகணத்தில் முதன்முறையாக மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலின்  நிருவாக எல்லைக்குட்பட்ட ஒன்பது பள்ளிவாயல்களிலிருந்தும் நான்கு கிராம சேவையளரை உள்ளடக்கிய குர்ஆனை மனனம் செய்த சுமார் 75 ஹாபிழ்களும் 180 மௌலவிமார்களும் நேற்று 01.07.2017ம் திகதி சனிக்கிழமை மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலில் கௌரவிக்கப்பட்டதுடன், மீரா மண்ணின் உலமாச்செல்வங்கள் என்ற மலர் வெளியீடும் இடம்பெற்றது.

மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலானது சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது.1960 பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தை முறையாகக் கற்ற ஆலிம்களை மீராவோடை பெற்றுக்கொண்டது. அதற்கு முன்னர் வேறு பிரதேச உலமாக்கள் இம்மீராவோடைப் பிரதேசத்திற்கு வந்து ஆன்மீக செயற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்று சடவாதத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு வருவாதாகவும், அல்லாஹ்வுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பைக் குறைப்பதற்கும் சதி முயற்சிகள் இடம்பெறுவதாகவும், உலமாக்களை இல்லாமல் செய்வதற்காக மத்ரஸாக்களை இல்லாமல் செய்து, இஸ்லாத்தை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், பாடசாலைகளில் இஸ்லாமிய வரலாறுகள் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு துறை விற்பன்னர்களும் தங்களிடம் வருபவர்களிடம் இஸ்லாத்தைச் சொல்லி அனுப்ப வேண்டும் என பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாணந்துறை ஸரீஆ உயர்கல்வி கற்கை நிறுவகத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அல்முப்தி எம்.என்.எம்.அன்பாஸ் அவர்கள் தெரிவித்தார்.

மற்றும் மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலின் பரிபாலன சபைக்கான  நினைவுச்சின்னத்தை இக்கௌரவிப்புக்குழுவின் தலைவர் யூ.எல்.எம் இல்யாஸ் மௌலவி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், காத்தான்குடி ஜம்மியத்துல் பலாஹ் அறபுக்கல்லுர்ரியின் உப தலைவர் எஸ்.எம்.அலியார் அவர்களும் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர எம்.ரீ.எம் றிஸ்வி அவர்களும், மீராவேடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் கே.பீ.எஸ்.ஹமீட் உட்பட பள்ளிவாயல் பரிபாலன சபையினரும் பிரமுகர்கள், மௌலவிமார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.DSC03778 DSC03784 DSC03802 DSC03804 DSC03807 DSC0381019510338_1521231541266229_7473462293045073854_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here