கிழக்கு முஸ்லிம்களுக்கு மீண்டுமொரு சோதனைக்காலம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
80

ddddddddமாகாண சபைத்தேர்தலுக்கான சமிக்கை உருவாகியுள்ளது. கட்சித்தாவல்களும், காட்டிக்கொடுப்புகளும், வீரமிக்க பேச்சுகளும், இடைவிடாத சேவைகளும், வாக்குறுதிகளும் மக்களிடமும் தலைவர்களிடமும் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

அதே நேரம், சமூகம் பற்றியும் ஊரின் மாற்றங்கள் பற்றியும் பேசிய பல முகநூல்கள் தலைவனுக்காக கொடி பிடிக்க ஆரம்பிக்கலாம் இருந்தும், இந்தத்தேர்தலை வெறுமனே முஸ்லீம் முதலமைச்சர் என்ற இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், சமூக ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான கண்ணோட்டத்தில் நோக்குவதே சிறந்தது.

1- ஏனெனில், சிறுபான்மைக்கட்சிகளும், சில்லறைத் தலைவர்களும் தேசியக் கட்சிகளுடனே சங்கமமாவார்கள்.

2- கருணா மற்றும் பிள்ளையானின் ஆதிக்கமில்லாமல் நடைபெறவுள்ள முதல் தேர்தல். வடக்கில் ஓரளவு சரிவு கண்டாலும் கடந்த காலத்தை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலமான சக்தியாக இருக்கும்.

3- கடந்த மாகாண சபைத்தேர்தலுக்குப்பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஓரளவு கிழக்கில் பலம் பெற்றுள்ளது. கூட்டணி அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தும்.

4- கடந்த தேர்தலை விட எதிர்வரும் தேர்தலில் ஒரு புறம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அத்தாவுள்ளாஹ் அணி, ஹிஸ்புல்லா,  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பசீர் சேகுதாவூத், ஹஸனலி, சில முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் மையோன் முஸ்தபா, இம்ரான் போன்ற முஸ்லீம் தலைமைகள் அறிமுகக்கூட்டணி அமைப்பதில் பல சிக்கலை எதிர்நோக்கலாம்.
இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம்.

5) சிங்கள வாக்காளர்களைப் பொறுத்தவரையில், அம்பாறையில் ஐக்கிய தேசிய கட்சியும் திருகோணமலையில் பொது ஜன ஐக்கிய முன்னணியும் செல்வாக்குடனுள்ளது. இருந்தும், மஹிந்த அணியினர் கடுமையான போட்டியை சிங்கள வாக்காளர்களிடயே ஏற்படுத்தலாம்.

6) சிங்கள மக்கள் மஹிந்த, ரணில் மற்றும் மைத்திரி என்று பிரிந்து செயற்பட்டால், முஸ்லிம்கள் ஒற்றமையுடன் செயற்பட்டு ஆசனங்களை அதிகரிக்கலாம். இதன் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு சமமான ஆசன பலத்தைப் பெறலாம்.

7) அத்துடன், கிழக்கில் அதிகமான ஆசனங்களைத்தனித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறும். இவர்களுடான கூட்டு மீண்டும் ஆட்சியமைப்பதில் முக்கிய இடத்தை வகிக்கும்.

ஆகவே, முஸ்லிம்கள் வெறுமனே முதலமைச்சர் கனவுகளால் ஆசனங்களை இழப்பதை விட, தங்களது பிரதிநிதிகளைத் திட்டமிட்டு அதிகரிப்பதன் மூலம் பலமிக்க சக்தியாக மாறலாம்.

இது தொடர்பான விரிவான கட்டுரை விரைவில்…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here