கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏறாவூர் வருகை

0
239

fffffஎம்.எச்.எம்.இம்றான்

கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ அல் ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் முயற்சியில் ஏறாவூரில் அமைக்கப்பட்டு வரும் நகர சபையின் புதிய நிருவாகக்கட்டடத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்விலும், ஏறாவூரில் நிர்மாணிக்கப்படவிருக்கும் சுற்றுலாத்தலத்தின் நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இவ்வருகையின் போது ஆரம்பித்து வைப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here