கிழக்கின் புதிய ஆளுனருக்கு கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹ்மத் நேரில் சென்று வாழ்த்து

0
255

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டே தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ரோஹித போகல்லாகம இன்று 04.07.2017ம் திகதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு ஐனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அகமட் இன்று காலை புதிய ஆளுனரை அவரின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின்  முன்னாள் ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ இன்று முதல் ஜனாதிபதியின் செயலாளராகப் பதவிகளைப் பொறுப்பேற்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ரோஹித போகல்லாகம கிழக்கின் ஆளுநராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நேற்றைய தினம் மாலை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவைச் சந்தித்து அவருக்கு நேரில் சென்று வாழ்த்துக்கூறியமை குறிப்பிடத்தக்கது. 616A7578 616A7605 former

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here