மூதூர் அல் மினாவில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கு

0
186

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருமலை-மூதூர் அல் மினா மகா வித்தியாலயத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் இள வயதுத் திருமணங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று 05.07.2017ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வளவாளர்களாக மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி, மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.பாயிஸ்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.உவைஸ், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.19247835_682640105265636_6821243916514440054_n 19598571_682639975265649_6247367508290869763_n 19601504_682640005265646_452517060234729155_n 19665612_682640071932306_5659770826374201493_n 19875174_682640135265633_3968449696049215698_n 19875358_682640045265642_5747161640025502932_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here