பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதிப்பங்களிப்புடன் புதிய சுற்றுலாப் படகுச்சவாரி ஆரம்பம்

0
190

HRS_2540எம்.ரீ.ஹைதர் அலி
காத்தான்குடி அல்-அக்ஸா ஆற்றங்கரை மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாவி சுற்றுலா படகுச்சவாரி சேவை கடந்த 2017.07.05ஆந்திகதி-புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்படகுச் சேவையினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இச்சுற்றுலாப் படகுச்சேவையினூடாக மண்முனை, முதலைக்குடா, சிரையா தீவு, கரையக்கண் தீவு, பெரியகளம், கல்லடி, முகத்துவாரம் உள்ளிட்ட ஏனைய சிறு படகுச்சவாரிகளையும் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் இயற்கையோடு ஒருமித்த இவ்வாவிச்சுற்றுலா சேவையானது, சிறுவர்கள் மற்றும் படகுச்சவாரி பிரியர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறந்த பொழுதுபோக்குத் திட்டங்களை ஊக்குவிக்குமுகமாக, இப்படகுச்சவாரி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படகின் கூரையினை அமைப்பதற்கான முழுமையான செலவினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.HRS_2533 HRS_2540 HRS_2572 HRS_2598 HRS_2601 HRS_2604

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here