யாழில் தகவலறியும் சட்ட தொடர்பில் செயலமர்வு

0
272

பாறுக் ஷிஹான்
தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபை பிரதம செயலாளர், மாவட்டச்செயலாளர்கள், அமைச்சு மற்றும் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள், பிரதேச செயலாளர்களுக்கான செயலமர்வொன்று நடைபெற்றது.

இன்றைய தினம் (7)   நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வானது, வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக  தெளிவுபடுத்தும் செயலமர்வாக  அமைந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள கிறீன் கிறாஸ்  (Green Grass Hotel,Asservatham Lane, Jaffna ) ஹோட்டலில் காலை 9.00 மணிக்கு இந்தச் செயலமர்வு ஆரம்பமானதுடன், ஊடக அமைச்சின் செயலாளர் ரமணி குணவர்த்தன, ஊடக அமைச்சின் அதிகாரிகள், வட மாகாண ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். img_2978 img_2981 img_2983 img_2984 img_2985-1 img_2986 img_3013 img_3015 img_3016-678x381

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here