துப்பாக்கிகளுக்கு சுஜூது செய்யமால் பெறப்பட்டதே சுதந்திர கிழக்கு: சேகு இஸ்ஸதீனால் மூடி மறைக்க முடியாது-அக்கறைப்பற்று அஸ்மி அப்துல் கபூர்

0
232

fffஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடக்கு கிழக்கு தனி மாநிலங்களாக உயர் நீதிமன்றத்தால் ஜே.வி.பி.யினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

அதே ஆண்டு மே மாதம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெறுகிறது. முஸ்லீம் தேசியவாதிகள் இயக்கமென்ற அமைப்பை உருவாக்கி, முஸ்லீம் சுயாட்சி தொடர்பில் சேகு இஸ்ஸதீன் பேசுகிறார். அதற்காக கையேடு சிறியளவிலான நூலொன்றை முஸ்லீம் சுயாட்சி எனும் பெயரில் வெளியிடுகிறார்.

அந்நூலில் “வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்தால், அதைப்பிரிப்பதற்க்கு முஸ்லீம்கள் காரணமாக இருந்தால், எமது பிரதேசத்தில் இரத்த ஆறு ஓடும்” என எச்சரிக்கிறார்.

2002ம் ஆண்டு இடம்பெற்ற நோர்வேயுடனான ஒப்பந்ததில் மு.கா வினுடய தலைவர் ஹக்கீம் சோரம் போய் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லீம்களை இனக்குழு என கையெழுத்திடுகிறார். அதனோடு, இணைந்தே ஹக்கீம்-அதாஉல்லா பிளவு உருவாகின்றது.

கிழக்கு தனி மாகாணமாக இருப்பது முஸ்லீம் சமூகத்தை தமிழ் தேசியம் சம அந்தஸ்தத்தில் வைத்து இனத்தீர்வு விடயத்தில் பேச வைக்க முடியமென அதாஉல்லாஹ் நம்பினார்.

அதற்கான சிந்தனையை மக்களுக்குள் விதைத்தார். தேசிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் மகிந்த ராஜபக்சவை அழைத்து வந்து இரண்டு விடயங்களை முன் வைத்தார்.

01. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரல்
02. கிழக்கு மாகாணத்தை தனியாகப் பிரித்தல்

அதன் பின் நிகழ்ந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அதா வடக்கு கிழக்கு பிரிப்புக்கான தளமாகவே அதை மக்கள் மயப்படுத்தும் தெளிவூட்டலை செய்தார்.

ஆனால், சேகுஇஸ்ஸதீன் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம் சுயாட்சி எனும் நலிவடைந்த பிடிமானமில்லாத கதைகளுக்குள் ஊடுருவும் காட்சிகளை அரங்கேற்றினார்.

ஆனால், அதாஉல்லாஹ் சொன்னவை ஒவ்வொன்றாய் நிகழ்ந்தது. வடக்கு கிழக்கு பிரிப்பில் முஸ்லீம்களல்லாத ஒரு கட்சி ஈடுபட வேண்டும். வழக்குத் தொடுக்க வேண்டுமென அதாஉல்லா விரும்பினார். பலமுறை ஜேவிபியினரைச் சந்தித்தார். ஏனெனில், புலிகளின் ஆயுதங்களுக்கு அஞ்சாமல் அதாஉல்லாஹ் பேசலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையும் காவு கொடுக்க முடியாது. அதனால் வழக்குத் தொடுக்கப்பட்டு கிழக்கு பிரிக்கப்பட்டது.

அதன் பின், 2008ம் ஆண்டு முதலாவது மாகாண சபைத்தேர்தலில் பிள்ளையானை முதலமைச்சராக்கப் போகிறார் அதாஉல்லாஹ் என துள்ளிக் குதித்தார்கள். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுசரணையுடன் முஸ்லீம் முதலமைச்சரைப் பெற்றிருக்கிறோம்.

இன்று வடக்கு கிழக்கு இணைய வேண்டும் எனும் சம்பந்தன் ஐயா எமக்குத்தருவது முஸ்லீம் முதலமைச்சர் எனும் நரித்தந்திரம் என்றால், அது வடக்கு கிழக்கு பிரிய வேண்டுமெனக்கூறி முஸ்லீம் சமூகத்தை தூரசிந்தனையோடு துப்பாக்கிகளுக்கு சுஜூது செய்யமால் மீட்டெடுத்த பெருமையின் அவதானிப்புத்தான் என்பதே அழிக்க முடியாத வரலாறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here