பிரதமரின் கூற்றுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பைக்காட்ட வேண்டும்

0
250

dvdvd-அ அஹமட்-

இலங்கை நாட்டில் சில பேரினவாதக்குழுக்களுக்கெதிராக நீதியை நிலை நாட்ட வேண்டிய தேவையுள்ளது. இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கப்பால் பேரினத்தைச் சேர்ந்த சகோதர அரசியல்வாதிகளின் பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானது. பேரின சகோதர அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கரிசணை கொள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மிகவும் கவனத்திற்கொள்ளத்தக்கது.

அளுத்கமை கலவரத்தில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யென தெரிந்தும் இதுவரை முஸ்லிம் கட்சிகள் எதுவும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தாமை கவலையளிக்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்படியிருக்கும் நிலையில், பேரின சகோதரர்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது.

முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் யானையின் வால் பிடித்துத் திரிய வேண்டிய தேவையிருப்பதால், இவர்கள் ஒரு போதும் பிரதமரை நேருக்கு நேர் சுட்டிக்காட்டி எந்தவிதமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொள்ளமாட்டார்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், தனது பலமான எதிர்ப்பை வெளிக்காட்டி வரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரைக்காரை முஸ்லிம் கட்சிகள் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுக்களுக்கான தெளிவு பாராளுமன்றத்தில் வைத்து வழங்கப்படுவதே மிகவும் பொருத்தமானதாகும். இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகள் ஒருவரையொருவர் வீழ்த்தி முன்னேறுவதில் காட்டும் அக்கறையின் ஒரு சிறு பகுதியேனும் முஸ்லிம் மக்கள் தொடர்பிலான விடயங்களில் காட்டினால் இலங்கை முஸ்லிம் சமூகம் எங்கோ சென்றிருக்கும். இலங்கை முஸ்லிம் சமூகம் தீர்வின்றித் தவிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளே பிரதான காரணமென்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here