மீராவோடை அல்-ஹிதாயாவின் பரிசளிப்பு விழா தொடர்பில் சுமூகத்தீர்வு

0
83

மீராவோடை யாஸீன்

கடந்த சில மாதங்களாக இழுபறியிலிருந்து வந்த மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா சம்பந்தமான பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது.

மேற்படி பரிசளிப்பு விழா நாடாத்துதல் சம்பந்தமாக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று 09.07.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற பழைய மாணவர்களுடனான சந்திப்பின் போதே சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

பழைய  மாணவர்களின் பூரண அனுசரணையில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழா நிகழ்வுக்கு பிரதேச மற்றும் மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளையும் கல்வியதிகாரிகளையும் அழைத்து சிறப்பாக நடாத்தல் என்ற ஏகோபித்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே மேற்படி சுமூகமான தீர்வு எட்டப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.WhatsApp Image 2017-07-09 at 11.03.23 PM WhatsApp Image 2017-07-09 at 11.03.24 PM WhatsApp Image 2017-07-09 at 11.03.25 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here