புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சினால் திருமலைக்கு 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
100

unnamed(ஆர்.ஹஸன்)
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான விசேட நிதியொதுக்கீட்டில் திருகோணமலை மாவட்டத்துக்கு 20 மில்லியன் ரூபா நிதி 38 வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டும், செய்யப்படாமலும் இருக்கின்ற பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக மேற்படி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலை மாவட்ட மக்கள் பிரநிதிகளின் திட்டமும்மொழிவுகளுக்கமைய 38 வேலைத்திட்டங்கள் இதன் மூலம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய மூதூர், தம்பலகாமம், கந்தளாய், வெருகல், குச்சவெளி, கிண்ணியா, தோப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அபிவிருத்தி, குழாய் நீர்க்கிணறுகள், வீதி அபிவிருத்தி எனப்பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here