ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணிக்கொள்வனவுக்கு உதவிடுவோம்!

0
290

1மீள்பிரசுரம்

நன்றி-எம்.ரீ.எம்.பாரிஸ் & ஏ.ஜீ.ஏ.ஹனீஸ்
‘மனிதன் மரணமடைந்து விட்டால், அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா), மாண்ட பின்பும் பிரயோசனமளிக்கும் கல்வி, பிரார்த்தனை செய்யும் பிள்ளைகள் (ஹதீஸ்)

இதனடிப்படையில், மட்டக்களப்பு-ஓட்டமாவடி-3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் அதிகரித்த மாணவர் தொகை காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டு பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அவ்விடநெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில் காணியை ஒன்றை கொள்வனவு செய்து கொள்ள நல்லுள்ளம் கொண்டோரிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றது குறித்த பாடசாலை.

மட்டக்களப்பு-ஓட்டமாவடி-3ஆம் வட்டாரத்தில் அமைத்துள்ள ஒரு பாடசாலை தான் ஹிஜ்ரா வித்தியாலயம். இப்பாடசாலை இப்பிரதேச ஏழைச்சிறுவர்களின் கல்வி நிலைமையைக் கருத்திற்கொண்டு 1980 ஆம் ஆண்டு ஒரு ஆரம்பப்பாடசாலையாக 79’X 80’ அளவுள்ள காணியொன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இப்பாடசாலையின் வளர்ச்சி அதன் பௌதீக வளங்களை விரிவுபடுத்தல், மாணவர்களின் தொகை அதிகரிப்பு, இடப்பற்றாகுறை, அன்றாடம் மாணவர்கள் எதிர்நோக்கும் இடநெருக்கடி மற்றும் சுகாதாரப்பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு பாடசாலையின் அருகிலுள்ள காணியைக் கொள்வனவு செய்வதென பாடசாலை நிருவாகமும், அபிவிருத்திக்குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளன.

இதனடிப்படையில் காணிக்கொள்வனவுக்குழுவொன்று அமைக்கப்பட்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்வனவு செய்யத்திட்டமிட்டுள்ள காணியின் விலை ரூபா 35 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிதியினை 06ஆம் மாதம் 30ம் 2017 திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. குறுகிய காலமென்பதால் பல்வேறுபட்ட முயற்சிகளில் காணிக்கொள்வனவு குழு ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கான எதிர்பார்ப்புத்தொகையை இதுவரை சேகரித்துக் கொள்ள முடியாத நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்பின் சகோதர, சகோதரிகளே! நீங்களும் தங்களுடைய மறுமை வாழ்வுக்காக நிரந்தரமான தர்மம் செய்ய நினைக்கும் நல்லுள்ளங்களாக இருப்பின், இப்பாடசாலையின் காணிக்கொள்வனவுக்கு உங்களாலும் உதவிட முடியும்.

இக்காணிக்கான நிதி சேகரிப்பினை இலகுபடுத்த 10.52 பேர்ச்சஸ் கொண்ட இக்காணியை 2865 ஆயிரம் சதுர அடி காணித்துண்டுகளாகப் பிரித்துள்ளனர். ஒரு சதுர அடி காணியின் விலை ரூபா.1250 (ஆயிரத்து இருநூற்றி ஐம்பது மாத்திரமே) ஆகும்.

இப்பாடசாலையினதும் ஏழை மாணவர்களினதும் கல்வி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு உங்களால் இயலுமான சதுர அடி காணித்துண்டுகளைக் கொள்வனவு செய்வதற்கு செய்து உதவி புரியுமாறு பாடசாலை காணிக்கொள்வனவுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு:-
காணிக்கொள்வனவு குழு
தலைவர்:-
கே.எல்.எம்.இர்சாத்
(முகாமையாளர், இலங்கை வங்கி)
தலைவர், மஸ்ஜிதுல் ஹைர்

செயலாளர்:-
எச்.எம்.தௌபீக்

பொருளாளர்:-
அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.முஸ்தபா (சிறாஜி)
பேஸ் இமாம், ஓட்டமாவடி முகைதீன் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல்

அமானா வங்கி கணக்கு இலக்கம் :- 0110289438001
தொலைபேசி இலக்கம்:- 0776104595, 0755537393

மேற்குறிந்த நபர்களைத் தொடர்பு கொண்டு நேரடியாகவும் வங்கியிலும் வைப்பிளிட்டு உதவ முடியும்.1 2 3 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here