கல்குடா எரிசாராய உற்பத்தித் தொழிற்சாலை தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபையின் நடவடிக்கை என்ன?-பிரதியமைச்சர் அமீர் அலி கேள்வி

0
293

01எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்குடா எதனோல் தொழிற்சாலை அமைக்கும் பணியானது, வாழைச்சேனை பிரதேச சபை அனுமதியின்றி இடம்பெறுவதாகவும், அதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதாக பிரதேச சபை செயலாளர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு வழக்குத்தாக்கல் இடம்பெற்றுள்ளதா? என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் மேற்படி கேள்வியை எழுப்பினார்.

இது தொடர்பாக வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் சார்பாக வருகை தந்த பிரதேச சபையின் பிரதிநிதி, தனக்கு இது தொடர்பாகத் தெரியவில்லையெனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

கல்குடா கல்வி வலயத்தில் அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், சில ஆசிரியர்களைக் கொண்டு நடமாடும் கல்வியைச் சேவையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இதனை நிறைவேற்ற வாகன வசதிகளைப் பெற்றுத்தருமாறு கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ரவி கேட்டுக் கொண்டார்.

இதற்கிணங்க பிரதேச அபிவிருத்தி நிதி மற்றும் அரச நிறுவனங்களின் உதவிகள் மூலம் வாகன வசதிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கையெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வாழைச்சேனைப் பிரதேசத்தில் அதிகமாக பனை மரங்கள் வெட்டுப்படுவதைக் குறைத்துக் கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், வாழைச்சேனைப் பகுதியில் தமிழ்-முஸ்லிம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தனி இடமின்மையால் பிரச்சனைகள் இடம்பெறுவதால், தனித்தனி இடம் வழங்குமாறு சாரதிகள் கேட்டுக் கொண்டதற்கமைய உரிய அதிகாரி சமூகம் தராமையால், அடுத்த கூட்டத்திற்குள் இதற்குரிய தீர்வுகள் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்ம, பாராளுன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண பிரதித்தவிசாளர் நி.இந்திரகுமார், அதன் உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எம்.சந்திரபால, திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.01 02 03 04 05 06 07 08 09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here