கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் வாழ்த்து

0
294

04பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகாண புதிய ஆளுநராக கடந்த 04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கமைய இன்று 11.7.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை தனது கடமைகளை திருகோணமலை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண வீதிய அபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உள்ளிட்டவர்களுடன் ஆளுனரின் செயலாளர், திணைக்களத் தலைவர்கள், செயலாளர் எனப்பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

“கிழக்கு முழுவதும் தனது சேவைகளை மூவின மக்களுக்கும் சமமான சேவையாக மிளிர வேண்டுமெனவும், தாங்களின் சேவைகளை நாம் மிகவும் எதிர்பார்தவர்களாக தாங்களுக்கு வாழ்த்துக்கூறிய இன்முகத்துடன் கிழக்கு மாகாணத்திற்கு அழைக்கின்றோம் எனவும், முன்னைய ஆளுநரின் சேவையை நாம் பாராட்டி வாழ்த்துகின்றோம்” எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமம்ட் நஸீர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 002 03 04 07

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here