புதிய மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்பத்தயார்-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

0
226

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து கிழக்கைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளாக அடையாளங்காணப்பட்டுள்ள வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆளுநருடன் இணைந்து தமது திட்டங்களை வலுப்படுத்தி, முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண புதிய ஆளுனராக ரோஹித பொகொல்லாகம பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்ளிட்ட கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். gv 01 gv 02 gv 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here